போஜ்பூர் திருக்கோவிலை கட்டும் பணி முடியாமல், அதன் மீதமாக பாறை ஓவியங்களும், சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. இவை நம் பழமையான கட்டிடக் கலையின் சிறப்பை கூறுவதாக அமையப்பெற்றுள்ளன.
இங்கு தான் சிற்பங்களை செதுக்கி, அழகுபடுத்தி பின்னர் கோவிலுக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். மேலும், செதுக்கப்பட்ட அழகிய சிற்பங்கள், தூண்கள், ஓவியங்கள், கோவிலின் திட்ட வரைபடம் என ஏராளமான கட்டமைப்புக்களை இங்கே காணமுடிகிறது.
கோவிலை மண்டபத்துடன் சரி சமம் ஆக்க பயன்படுத்தப்பட்டிருக்கும் மணற்கற்களால் ஆன மிகப் பெரிய வளைவு நம் கட்டிடக் கலையின் சிறப்பை உணர வைக்கிறது.



Click it and Unblock the Notifications