Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புஜ் » வானிலை

புஜ் வானிலை

புஜ் நகர், வருடம் முழுவதிலும் மாறிக் கொண்டேயிருப்பதான வானிலையைக் கொண்டுள்ளது. கோடைகள் மிகவும் வெப்பமாகவும், மழைக்காலங்கள் நிச்சயமற்ற மழைப்பொழிவுகளோடும் காணப்பட்டாலும் குளிர்காலம் சாதகமான வெப்பநிலையுடன் ரம்மியமானதாகவே இருக்கின்றது.

கோடைகாலம்

புஜ் –இல் கோடைகாலம் நிலவும் மாதங்களான மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுள் கடைசி இரண்டு மாதங்கள் மிகுந்த வெம்மையுடன் காணப்படுகின்றன. இக்காலத்தின் போது அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸும், குறைந்த பட்சமாக 28 டிகிரி செல்சியஸுமாக வெப்பநிலை காணப்படும்.

மழைக்காலம்

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் புஜ் பகுதி மழைப்பொழிவைப் பெறுகிறது. இக்காலத்தின் போது கடுமையான மழைப்பொழிவுகள் இருக்கும். எனினும், மழைக்காலத்துக்கு பிந்தைய மாதங்களான அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்கள் அழகிய வானிலையைக் கொண்டிருக்கும்; ஆதலால் இதுவே புஜ் வருவதற்கு மிகவும் உகந்த காலமாகும்.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கக்கூடிய குளிர்காலத்தின் போது வெப்பநிலை குறைந்தபட்சம் 13 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸாகவும் வேறுபடும். இம்மாதங்களே புஜ் செல்வதற்கு மிகவும் ஏற்றவையாகும்.