Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பி.ஆர் மலைகள் » ஈர்க்கும் இடங்கள் » BRT காட்டுயிர் சரணாலயம்

BRT காட்டுயிர் சரணாலயம், பி.ஆர் மலைகள்

10

பி.ஆர் மலை சுற்றுலாத்தலத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக இந்த BRT காட்டுயிர் சரணாலயம் புகழ் பெற்றுள்ளது. இது கர்நாடக மாநிலத்தின் தென்பகுதியில் காவிரி ஆற்றுக்கும் துங்கபத்திரா ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது.

பிலகிரி ரங்கஸ்வாமி கோயில் காட்டுயிர் சரணாலயம் என்று அறியப்படும் இது கடல் மட்டத்திலிருந்து 5091 அடி உயரத்தில் 540 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் 1972ம் ஆண்டு காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் பகுதியாக உள்ளது.இந்த காட்டுயிர் சரணாலயத்தில் சுற்றுலாப்பயணிகள் பலவிதமான தாவர வகைகளை பார்க்கலாம். இங்கு பலவிதமான விலங்குகளும் உயிரினங்களும் வசிக்கின்றன. யானைகள், சாம்பார் மான்கள், புலிகள் மற்றும் காட்டெருமைகள் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

மேலும் 116 வகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் 22 வகையான ஊர்வன விலங்குகள் இங்கு இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 225 வகை பறவையினங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. விசிலடிச்சான், மஞ்சள் கழுத்து புல்புல், துடுப்புவால் கரிச்சான், கொண்டைப்பருந்து, நாகப்பருந்து, காட்டு மைனா போன்றவை இங்குள்ள பறவைகளில் குறிப்பிடத்தக்கவை.தாவர இனங்கள் என்று பார்க்கும்போது இந்த BRT காட்டுயிர் சரணாலயம் பலவிதமான பசுமைமாறா, வறண்ட புதர்க்காடுகளையும், சமவெளிகளையும், இலையுதிர் காடுகளையும், பசும் புல்வெளிகளையும் கொண்டுள்ளது.

இந்த எல்லா அம்சங்களையும் பயணிகள் காட்டுச்சவாரி எனப்படும் திறந்த ஜீப் சவாரி மற்றும் யானைச்சவாரி மூலம் பார்த்து ரசிக்கலாம். மேலும் மீன் பிடிப்பு, பரிசல் பயணம், தூண்டில் மீன் பிடிப்பு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்கலாம் அல்லது பார்த்து ரசிக்கலாம்.

இந்த காட்டுயிர் சரணாலயத்துக்கு விஜயம் செய்ய விரும்பும் பயணிகள் அக்டோபரிலிருந்து மே மாதம் வரையான இடைப்பட்ட காலத்தில் செல்வது சிறந்தது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Aug,Sun
Return On
17 Aug,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Aug,Sun
Check Out
17 Aug,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Aug,Sun
Return On
17 Aug,Mon