பைந்தூருக்கு சுற்றுலா வர ஆண்டின் எந்த காலமும் உகந்ததே. எனினும் ஆகஸ்டிலிருந்து, மார்ச் வரையிலான காலங்கள் சுற்றுலா வருவதற்கு சிறந்த காலங்களாக அமையும்.
(பிப்ரவரி முதல் மே வரை) : கடற்கரை கிராமமான பைந்தூரின் கோடை காலம் சற்று வெப்பமாகவே இருக்கும். அச்சமயங்களில் பைந்தூரின் வெப்பநிலை குறைந்தபட்சமாக 24 டிகிரியாக இருக்க, அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரியை எட்டும்.
(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : பைந்தூரின் மழைக் காலங்களில் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக கன மழை பெய்வதோடு, ஈரப்பதமும் அதிகமாகவே காணப்படும்.
(அக்டோபர் முதல் ஜனவரி வரை) : பைந்தூரின் பனிக் காலங்கள் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரியுடன் எப்போதும் இதமானதாகவே இருக்கும்.