பதானி தர்வாஸா, சாந்தேரி நகரத்தில் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கும் பெரும் நுழைவாயிலாகும். இந்த எழில் மிகு நுழைவாயில், முந்தைய காலங்களில் இந்த இடத்தில் இருந்து வந்த பெருமைமிகு நாட்களை நினைவுபடுத்துவதாக உள்ளது.
அற்புதமான பாணியில் கட்டப்பட்டுள்ள இதன் கூர்மையான ஸ்தூபிகள் அந்த காலத்தில் இருந்து வந்த அருமையான கட்டிடக்கலையை காட்டுகின்றன. இதன் அலங்கார வடிவமைப்புகள் இதன் உன்னதமான கலை வேலைப்பாடுகளை காட்டுவதாகவும் உள்ளன.
இந்த பதானி தர்வாஸா நுழைவாயில் 30 அடிக்கும் மேலான உயரம் கொண்ட இடமாகும். இதன் கூர்மையான ஸ்தூபிகள் கற்சுவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் தனித்தன்மையான கட்டுமானம் மற்றும் வடிவமைப்பிலேயே இந்த நுழைவாயிலின் அழகு உள்ளது.
எனினும், இன்றைய காலகட்டத்தில் பதானி தர்வாஸாவுக்கு, அதன் சீர்மிகு பழமையை நிலைநிறுத்துவதற்கு, சில பராமரிப்பு வேலைகளும் தேவைப்படுகின்றன.
ஆனால், சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளதாலும், வளமான மற்றும் அலங்காரமான நுழைவாயிலாக உள்ளதாலும், இது தனித்தன்மையான சுற்றுலா தலமாக விளங்குகிறது. சாந்தேரிக்கு வெளியில் உள்ள அரிய சிறப் வேலைப்பாடுகள் மிகுந்த நினைவுச்சின்னமாக பதானி தர்வாஸா உள்ளது.



Click it and Unblock the Notifications