சாந்தேரியில் உள்ள புரானி அதாலத் என்ற இடம் நியாலயா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த நீதிமன்றமாகும். சாந்தேரியை ஆண்டு வந்த புண்டேலா ஆட்சியாளர்கள், சாந்தேரியைச் சுற்றிலும் பல்வேறு முக்கியமான மற்றும் கவர்ச்சியான கட்டிடங்களைக் கட்டியுள்ளனர்.
சுமார் 2 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆண்டு வந்த புண்டேலா ஆட்சியாளர்களின் காலத்தில் கட்டப்பட்ட புகழ் மிக்க கட்டிடங்களில் ஒன்றாகவே புரானி அதாலத் உள்ளது.
இது ஒரு சதுர வடிவமான, இரண்டடுக்கு கட்டிடமாகும். குறுக்கும் நெடுக்குமாக செல்லும் கம்பி வேலைகள் மற்றும் மூன்றடுக்கு வாயில்கள் ஆகியவற்றுடன் இந்த மாளிகையின் நுழைவாயில் கற்களால் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டித்தின் முனைகளில் உயர்தப்பட்ட மாடங்கள் உள்ளன. இந்த நுழைவாயில்கள் அழகுற அலங்கரிக்கப்பட்டும் மற்றும் கூரைகளில் தாமரை சிற்ப வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதன் முன்பகுதி சுவர்கள் வடிவகணித வார்ப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த கதவுகளின் இருபக்கங்களும் யானைகளைக் கொண்டு மூடப்படும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாடங்கள் சமதளம் வரையிலும் நீண்டிருக்கின்றன மற்றும் இந்த அமைப்பை உயர்த்தப்பட்ட இரட்டை தூண்கள் தாங்கிக் கொண்டுள்ளன. இந்த அழகிய கட்டிடம் இன்றும் கூட சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றது.



Click it and Unblock the Notifications