Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்கல்தரா » வானிலை

சிக்கல்தரா வானிலை

அக்டோபர் மற்றும் ஜுன் மாதத்துக்கு இடைப்பட்ட காலம் சிக்கல்தராப் பகுதிக்கு விஜயம் செய்ய உகந்ததாக விளங்குகிறது. இது குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தை உள்ளடக்கியதாக உள்ளது.

கோடைகாலம்

பெரும்பாலும் கோடைக்காலத்தில் சிக்கல்தராப் பகுதி மிதமான வெப்ப நிலையைக் கொண்டதாக உள்ளது. இக்காலத்தில் வெப்பநிலை 320C முதல 380C வரை காணப்படுகிறது. மார்ச்சிலிருந்து மே மாதம் வரை நீடிக்கும் இந்த  கோடைக்காலத்தில் சிக்கல்தராப் பகுதிக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

மழைக்காலம்

ஜுன் முதல் இருந்து செப்டம்பர் மாதம் வரை சிக்கல்தராப் பகுதி கடுமையான பருவ மழையைப்பெறுகிறது. மழையின் காரணமாக இப்பருவத்தில் இங்கு வெளிச்சுற்றுலாவில் ஈடுபடுவது சிரமம் என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர்காலத்தில் சிக்கல்தராப் பகுதி குளிருடன் காணப்படுகிறது. சராசரியாக வெப்பநிலை 150C முதல் 250C வரை உள்ளது. பகலில் மிதமான வெப்பத்துடனும் இனிமையான சூழலுடனும் காணப்படும் இப்பருவம்  மலைப்பாதைகளில் ஏகாந்தமாக நடைப்பயணம் மேற்கொள்ளவும் சுற்றிப்பார்க்கவும் உகந்ததாய் உள்ளது.