கல்பேஷ்வர் மந்திர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2134 அடி உயரத்தில், உர்கம் பள்ளத்தாக்கில் அமையப்பெற்றுள்ளது. இங்கு, சிவனின் ‘ஜடா’ என்றழைக்கப்படும் பின்னலிட்ட முடி வணங்கப்படுவதாக ஐதீகம்.
பஞ்ச் கேதார் யாத்திரையின் போது ஐந்தாவதாக வருகின்ற இக்கோயில் வருடத்தின் எச்சமயத்திலும் சென்று வரக்கூடியது. இந்த சிறிய கற்கோயிலை ஒரு குகைப்பாதை வழியாக அடையலாம்.
பிரபல முனிவரான அர்கியா இக்கோயிலின் கல்பவிருக்ஷ மரத்தின் கீழமர்ந்து தியானித்ததாகவும், அவர் ஊர்வஷி என்றொரு தேவமங்கையை இங்கு உருவாக்கியதாகவும் நம்பப்படுகிறது. ஆதி குரு ஷங்கராச்சாரியாரின் சீடர்களான தென்னிந்தியாவின் நம்பூதிரி பிராமணர்கள், இக்கோயிலின் பூசாரிகளாக விளங்குகின்றனர்.



Click it and Unblock the Notifications