Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்பெட் தேசிய பூங்கா » வானிலை

கார்பெட் தேசிய பூங்கா வானிலை

கார்பெட் தேசிய பூங்காவின் வனாந்திரங்களை சிறப்புற அனுபவிக்க நினைப்பவர்கள் இப்பகுதிக்கு நவம்பர் முதல் மே மாதம் வரையிலான காலங்களில் (கோடை மற்றும் குளிர் காலம்) வருவது நல்லது. மேலும், மழைக்காலத்திற்கு முன்னரும், பின்னரும் இந்த பூங்காவிற்கு வர சிறந்த தருணங்களாக இருக்கின்றன.

கோடைகாலம்

கார்பெட் தேசிய பூங்காவில் மார்ச் மாதம் தொடங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நிலவி வரும். இந்நாட்களில் இங்கு நிலவும் அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலையாக முறையே 40°C மற்றும் 30°C ஆகியவை உள்ளன.

மழைக்காலம்

கார்பெட் தேசிய பூங்காவில் மழைக்காலம் ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் நீடித்திருக்கிறது. மழைக்காலத்தில் பெருமளவு மழைப்பொழிவைப் பெறும் இடமாக இந்த தேசிய பூங்கா உள்ளது.

குளிர்காலம்

கார்பெட் தேசிய பூங்காவில் டிசம்பர் மாதம் தொடங்கும் குளிர் காலம் பிப்ரவரி மாதம் வரையிலும் நீடித்திருக்கிறது. இந்நாட்களில் குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச வெப்பநிலையாக முறையே 5°C மற்றும் 30°C ஆகியவை உள்ளன. இந்நாட்களில் மூடுபனி நிரம்பிய காலைப்பொழுதுகள் கார்பெட் தேசிய பூங்காவில் நம்மை வரவேற்கும்.