நவம்பர் முதல் மார்ச் மாதத்திற்குள் தியோகாருக்கு சென்று வந்தால் சிறப்பாக இருக்கும். எனினும் தியோகார் ஜெயின் மற்றும் இந்து சமய மக்களுக்கு ஒரு ஆன்மீகத் தலமாக இருப்பதால் ஆண்டு முழுவதும் இந்த பகுதிக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மார்ச் முதல் மே மாதம் வரை தியோகாரில் கோடைகாலம் நிலவுகிறது. இந்த காலத்தில் 25 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இங்கு இருக்கும்.
தியோகாரில் மழைக்காலம் என்றால் அது ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆகும். இந்த காலத்தில் பெய்யும் மழை வெப்பத்தின் உக்கிரத்தைக் குறைப்பதோடு, இங்கு வரும் பக்தர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கும். இந்த காலத்தில் வெப்பநிலை சற்று ஈரப்பதமாகவும் வெப்பச் சலனத்தோடும் இருக்கும்.
நவம்பர் முதல் பிப்ரவரி வரை தியோகாரில் குளிர்காலம் நிலவுகிறது. இந்த காலத்தில் 9 முதல் 25 டகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.