Search
  • Follow NativePlanet
Share

தியோகார் - சொர்க்க வாழ்க்கை!

17

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிக முக்கிய ஆன்மீகத் தலங்களுள் ஒன்றாக தியோகார் என்ற சிறிய கிராமம் விளங்கி வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் மிகச் சிறிய விவசாயக் கிராமமான தியோகார் முந்தைய குவாலியர் அரசின், தற்போதைய மத்தியப்பிரதேச மாநிலத்தின் எல்லைக்கு அருகில் அமைந்திருக்கிறது.

தியாகார் பண்டைய குப்தர்களின் வராற்றுச் சின்னமாக விளங்கி வருகிறது. இந்த பகுதியில் குப்த மன்னர்களின் நினைவிடங்கள் பலவற்றைப் பார்க்க முடியும்.

மேலும் பெட்வா ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் குப்த மன்னர்களின் அரண்மனை, இந்த அரண்மனைக்குள் அமைந்திருக்கும் ஜெயின் மற்றும் இந்து சமய மக்களின் நினைவிடங்கள் ஆகியவை பக்தர்களுக்கு புதிய இன்பத்தைத் தரும்.

தியோகாரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

தியோகாரைச் சுற்றியுள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்கள் முக்கால்வாசி பண்டையை நினைவிடங்கள் மற்றும் கோயில்கள் ஆகும். குறிப்பாக பண்டைய காலத்தில் வடஇந்தியாவில் பஞ்சயத்தனா கோயில் என்று அழைக்கப்பட தசவதாரா கோயில் இந்த பகுதியில்தான் அமைந்திருக்கிறது.

இந்த கோயில் ஏறக்குறைய முற்றிலும் அழிந்து போகும் தருவாயில் இருந்தாலும், இந்த கோயிலில் உள்ள கங்கா மற்றும் யமுனா தெய்வங்களின் சிற்பங்கள், பக்தர்களுக்கு முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன.

தியோகாரின் அடையாளமாக கருதப்படுவது தியோகார் கோட்டை ஆகும். இந்த கோட்டை கீர்த்திகிரிதுர்கா கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது 1057 ஆம் ஆண்டு சண்டாள அரசரான கீர்த்தவர்மன் என்பவரால் கட்டப்பட்டது.

இந்த கோட்டைக்கு அருகில் பல அழகிய ஜெயின் கோயில்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.

தியோகார் இங்கு பாயும் பெட்வா ஆற்றுக்குச் செல்லும் கணவாயாக இருந்து வருகிறது. தியோகரில் இருக்கும் அகழ்வாராய்ச்சிக் கலைக்கூடம் பார்ப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருப்போருக்கு இந்த கலைக்கூடம் உண்மையிலேயே உற்சாகத்தைத் தரும்.

தியோகாருக்கு எவ்வாறு செல்வது?

விமானம், தொடர்வண்டி மற்றும் பேருந்து மூலம் தியோகாருக்கு மிக எளிதாகச் செல்ல முடியும. தியோகாருக்கு மிக அருகில் லலித்பூர் என்ற இடத்தில் ஒரு தொடர்வண்டி நிலையம் உள்ளது. அதுபோல் தியோகாருக்கு அருகில் உள்ள குவாலியரில் ஒரு விமான நிலையமும் அமைந்திருக்கிறது.

தியோகாருக்குச் செல்ல தகுந்த காலம்

ஆண்டு இறுதியில் தியோகாருக்குச் சென்று வந்தால் அது சிறப்பாக இருக்கும்.

தியோகார் சிறப்பு

தியோகார் வானிலை

சிறந்த காலநிலை தியோகார்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தியோகார்

  • சாலை வழியாக
    தியோகாருக்கு சிறந்த சாலை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் உத்திரப்பிரதேச அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் பெருமளவில் தியோகாருக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தொடர்வண்டி மூலம் தியோகாருக்கு செல்ல வேண்டும் என்றால், தியோகாருக்கு அருகில் உள்ள லலித்பூரில் ஒரு தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது. இந்த தொடர்வண்டி நிலையத்திற்கு, டில்லி, மும்பை மற்றும் அலகாபாத் போன்ற நகரங்களிலிருந்து பல தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி பேருந்து மூலம் தியோகாருக்கு மிக எளிதாகச் செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    தியோகாருக்கு 235 கிமீ தொலைவில் குவாலியர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இங்கிருந்து பேருந்துகள் மூலம் தியோகாருக்கு மிக எளிதாகச் செல்லலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu

Near by City