தேவிகுளம் நகரிலிருந்து 111 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து பெங்களூர், சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு ப்ரீபெய்ட் டாக்சிகள் மூலம் சுலபமாக தேவிகுளம் நகரை அடைந்து விட முடியும். இவ்வகை டாக்சிகளில் கிலோமீட்டர் ஒன்றுக்கு 7 முதல் 12 ரூபாய் வரை வசூலிப்பார்கள்.