Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேவிகுளம் » வானிலை

தேவிகுளம் வானிலை

தேவிகுளம் ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையை கொண்டிருப்பதால் நீங்கள் எந்த பருவ காலங்களிலும் இந்த அழகிய மலை பகுதிக்கு சுற்றுலா வரலாம். எனினும் பனிக் காலத்தில் வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்படுவதால் கோடை மற்றும் மழைக் காலங்கள் தேவிகுளம் பகுதியை சுற்றிப் பார்க்க சிறந்த பருவங்களாகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : தேவிகுளம் நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 16 டிகிரியும், குறைந்தபட்சமாக 8 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும். இந்த காலங்களில் நிலவும் இதமான வெப்பநிலை தேவிகுளம் நகரை சுற்றிப் பார்க்க மிகவும் ஏற்புடையதாக இருக்கும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : தேவிகுளம் நகரின் மழைக் காலங்களில் நல்ல மழைப் பொழிவு இருக்கும். இந்த காலங்களில் தேவிகுளம் நகரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் சிறப்பானதாக இருப்பினும், நடைபயணம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதற்கு மழைக் காலம் உகந்தது அல்ல.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிர்ப்ரவரி வரை) : தேவிகுளம் நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 10 டிகிரியும், குறைந்தபட்சமாக 0 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.