தங்தர் முகாம், கடல் மட்டத்திலிருந்து 8300 அடி உயரத்தில், தனௌல்டியின் முதன்மை சந்தையிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள ஆல்பைன் மற்றும் சொகுசு கூடாரத்தில் தங்கிக் கொள்ளலாம்.
இந்த கூடாரங்களில் அனைத்து வித அடிப்படை மற்றும் சொகுசு வசதிகளும் கிடைக்கும். இந்த முகாம் முக்கியமாக, தீரச்செயல் விரும்பிகளுக்காக மலை ஏறுதல், ஆற்றை கடந்து செல்லுதல், நடை பயணங்கள், கோணல்மானலான தடுப்புகள் மற்றும் அதிரடிப்படை வலைகள் போன்றவகையான சேவைகளை வழங்குகிறது.
இது போக மினி கோல்ப், சாப்ட் பந்து கிரிகெட், இறகுப் பந்தாட்டம் மற்றும் மினி கூடைப்பந்து போன்ற வெளி விளையாட்டுக்கள் ஆடவும் ஏற்பாடு செய்து கொடுக்கிறது, இந்த முகாம் இந்த இடங்களை சுற்றிப் பார்க்கவும் உதவி புரிகிறது. வானின் நட்சத்திரங்களை கண்டு களிப்பவர்களுக்கும் பறவை விரும்பிகளுக்கும் இது மிகவும் உகுந்த இடம்.