தேவ்பிரயாக் - தெய்வீக ஓடைகள் சங்கமிக்கும் இடம்!

கடல் மட்டத்தில் இருந்து 2732அடி உயரத்தில், உத்தரகாண்டின் தேரி கார்வால் மாவட்டத்தில் இருக்கும் தேவ்பிரயாக் புகழ்பெற்ற மத ஸ்தலமாகும். ஆலாக்நந்தா மற்றும் பகீரதி நதிகள் சங்கமிக்கும் இடமாதலாம் சமஸ்கிருதத்தில் தேவ்பிரயாக் என்றால் 'புனித சங்கமம்' என்று அர்த்தப்படுவதால் இவ்விடம் தேவ்பிரயாக் என்றழைக்கப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் பிரம்மபுரி, பிரம்ம தீர்த்தம், ஸ்ரீகாந்த் நகர் என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. உத்தரகாண்டின் மாணிக்கம் என்றழைக்கப்படும் தேவ்பிரயாக்கில் தேவ் சர்மா என்ற இந்து சன்னியாசி ஒருவர் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

இந்து புராணத்தின்படி ராமனும் தசரதனும் இங்கு தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. பாண்டவர்கள் பத்ரிநாத்திற்கு செல்லும் முன் இங்கு பாதபூஜைகள் செய்ததாக கூறப்படுகிறது.  

இந்தியாவின் புனிதமான ஐந்து சங்கமங்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இவ்விடம் பஞ்ச் பிரயாக் என்றும் வழங்கப்படுகிறது. விஷ்ணு பிரயாக், ருத்ர பிரயாக், நந்த் பிரயாக் மற்றும் கர்ண் பிரயாக் ஆகியவை மற்ற நான்கு சங்கமங்கள் ஆகும்.

மேலும் ரகுநாத் கோவில், சந்திரபதனி கோவில், தஷ்ரத்ஷில கோவில் ஆகிய புகழ்பெற்ற கோவில்களும் இங்கு அமைந்துள்ளன. பகிரதி மற்றும் ஆலக்நந்தா நதிகளின் மேல் அமைந்துள்ள தொங்கு பாலங்களுக்காகவும் இவ்வூர் புகழ்பெற்று விளங்குகிறது.

சாலை, ரயில் மற்றும் விமான வாயிலாக தேவ்பிரயாக் பகுதியை அடையலாம். தேவ்பிரயாகிற்கு அருகில் இருக்கும் விமானநிலையம் டேராடூனின் ஜாலி கிராண்ட் விமானநிலையம் ஆகும்.

அங்கிருந்து டெல்லிக்கு அடிக்கடி விமான சேவை உண்டு. 94 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ஹரித்வார் ரயில் நிலையத்தில் இருந்து முக்கியமான நகரங்களான லக்னோ, மும்பை, புது டில்லி மற்றும் டெஹ்ராடூனுக்கு ரயில்வசதிகள் உண்டு.

வருடம் முழுவதும் சூடான வானிலையே நிலவுகிறது. பல நாட்களுக்கு நீளும் குளிர்காலம் மிகவும் குளிராகவும், கோடைகாலத்தில் மிதமான தட்பவெட்ப நிலையும் நிலவுகிறது. வருடம் முழுவதும் பயணிகள் தேவ்பிரயாக்கிற்கு செல்லலாம்.

Please Wait while comments are loading...