Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேவ்பிரயாக் » வானிலை

தேவ்பிரயாக் வானிலை

வருடத்தின் அனைத்து மாதங்களிலும் தேவ்பிரயாகிற்கு பயணப்படலாம். 

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): மார்ச் மாதத்தில் ஆரம்பித்து மே வரை நீளும் கோடைகாலத்தில் அதிகபட்சமாக 31டிகிரி வரையிலும் குறைந்தபட்சமாக 7டிகிரி வரையில் வானிலை நிலவுகிறது. சுற்றுலாவுக்கு தோதான வானிலை நிலவுவதால் இப்பருவத்தில் தேவ்பிரயாக் செல்வது பரிந்துரைக்கப்படுகிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): ஜூலை மாதத்தில் ஆரம்பித்து செப்டம்பர் வரை நீளும் மழைக்காலத்தில் மிக அதிகமான மழையும், குளிரான வானிலையும் நிலவுகிறது.

குளிர்காலம்

(அக்டோபரில் இருந்து ஃபிப்ரவரி வரை): அக்டோபரில் ஆரம்பித்து ஃபிபரவரி வரை நீளும் குளிர்காலத்தில் குறைந்தபட்சமாக  1டிகிரியும் அதிகபட்சமாக 7டிகிரி வரையிலும் வானிலை நிலவுகிறது.