சம்பா - மனிதனின் காலடிப்படாத சொர்க்க பூமி!

சம்பா என்ற அழகிய மலைவாழிடம் உத்தரகண்டிலுள்ள டெஹ்ரி கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இந்த இடம் கடல் மட்டத்திற்கு மேல் 1524 மீட்டர் உயரத்தில் உள்ளது. இயற்கை சுற்றுச்சூழலுடன், மாசில்லா அழகை கொண்டதினால் இவ்விடம் சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. டியோடர் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்திருக்கும் இந்த சம்பா நகரம், இயற்கை விரும்பிகளின் கனவுலோகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த மழைவாழிடம் அங்கு படர்ந்து இருக்கும் ஆப்பிள் மற்றும் ஆப்ரிகாட் பழத் தோட்டங்களுக்காகவும், அழகிய ரோடோடென்டிரான் பூந்தோட்டங்களுக்காகவும் பெயர் பெற்றது.

டெஹ்ரி அணை, சுர்கந்த தேவி கோவில் மற்றும் ரிஷிகேஷ் செல்லும் சுற்றுலாப் பயணிகள், சம்பாவை கடந்து செல்லும் போது கண்டிப்பாக இங்கே நேரத்தை செலவிட விரும்புவார்கள். கப்பார் சிங் நேகி நினைவகம் மற்றும் ஸ்ரீ பாகேஷ்வர் மகாதேவ் கோவிலும் இங்குள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்கள்

சம்பா வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் புகழ் பெற்ற தலமாக விளங்குகிறது கப்பார் சிங் நேகி நினைவகம். இது 1925 ஆம் வருடம் தாக்கூர் கப்பார் சிங் என்பவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கட்டப்பட்டது.

இவர் கர்ஹ்வால் ரைபில்ஸ் என்ற படைப்பகுதியில் 1913 ஆம் வருடம் சுழல்த்துப்பாக்கி பயன்படுத்தும் வீரராக இருந்தார். முதல் உலகப் போரின் போது நேகி தன் படையோடு ஜெர்மனியில் சண்டையிட்டு வெற்றியும் கண்டார்.

அவருடைய வீரத்தின் அடையாளமாக தீரச் செயலுக்கான உயரிய விருதான "தி விக்டரி கிராஸ்" அவரின் மறைவுக்கு பின் அவருக்கு அளித்து கவுரவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 21 ஆம் தேதி, கர்ஹ்வால் படைப்பகுதி இந்த வீரருக்கு தங்கள் அஞ்சலியை செலுத்த தவறுவதில்லை.

ஸ்ரீ பாகேஷ்வர் மகாதேவ் என்ற கோவில் சம்பாவின் மற்றொரு ஈர்ப்பாகும். மிகவும் புகழ் பெற்ற சமயஞ்சார்ந்த இந்த இடத்திற்கு பல பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். இந்த கோவில், அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்காக கட்டப்பட்டதாகும்.

ஹிந்து மக்களிடம் சமயஞ்சார்ந்த முக்கியத்துவம் பெற்ற ஸ்தலமாக இது விளங்குகிறது. இந்த கோவிலில் காணப்படும் சுயம்பு தானாகவே பூமிக்கு அடியில் இருந்து வெளிவந்தவை என்று நம்பப்படுகிறது. புகழ் பெற்ற சிவராத்திரி திருவிழாவை இங்கு மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் இங்கு விமானம், இரயில் மற்றும் தரை வழி மார்க்கமாக வந்தடையலாம். டேராடூனில் உள்ள ஜாலி கிரான்ட் விமான தளமே சம்பாவிற்கு மிக அருகாமையில் இருக்கும் விமான நிலையம்.

இது சம்பாவில் இருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று வர விமான சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ஜாலி கிரான்ட் விமான நிலையத்திலிருந்து சம்பா வருவதற்கு வாடகை கார்களை பயன்படுத்தலாம்.

சம்பாவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ரிஷிகேஷ் ரயில் நிலையம் தான் இதற்கு மிகவும் அருகில் இருக்கும் ரயில் நிலையம். பயணிகள் ரயில் நிலையத்திலிருந்து இந்த மலைவாழிடத்திற்கு வாடகை கார்கள் முலம் செல்லலாம்.

சம்பாவிலிருந்து அருகில் உள்ள பல நகரங்களான ஸ்ரீநகர், டேராடூன், டெஹ்ரி, தேவ்பிரயாக், உத்தர்காஷி, முசூரி மற்றும் ரிஷிகேஷ் போன்றவைகளுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன.

சம்பாவில் எப்போதுமே வானிலை இனிமையாகவும் மிதமானதாகவும் நிலவுவதால், இந்த அழகிய மலைவாழிடத்திற்கு வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் வருவதற்கு சுற்றுலாப் பயணிகள் விரும்புவார்கள்.

கோடைக்காலத்தின் போது அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும். இங்கே மழைக்காலம் ஆரம்பிப்பது ஜூலை மாதத்தில்.

இந்த காலத்தில் மிதுவான அளவு மழை பெய்யக் கூடும். மழைக்காலத்தை தொடர்ந்து குளிர் காலம் நவம்பர் மாதம் காலடி எடுத்து வைக்கும். இந்த நேரத்தில் குறைந்தபட்ச வெப்பம் 4 டிகிரி செல்சியசாக பதிவாகும்.

சம்பாவுக்கு எந்த நேரமும் வரலாம். என்றாலும் கூட குளிர் காலம் உச்சத்தில் இருக்கும் போது இங்கே வருவதை தவிர்க்க வேண்டும். மார்ச் முதல் ஜூன் மாதம் வரை இங்கு வருவது மிகவும் உகுந்த நேரம். வெளியில் சுற்றித் திரிய இந்தக் காலம் ஏற்றதாக இருக்கும்.

Please Wait while comments are loading...