Search
 • Follow NativePlanet
Share

பீம்தால் - அமைதியான நீரோடைகளும், புனித ஆலயங்களும்!

14

பீம்தால் அதன் அண்டை நகரமான நைனிடாலை விட மிகவும்  பழமையானது. பீம்தாலிலிருநது `காத்கோடாம்',` குமோன்' மலைகள், நேபாள்,  மற்றும் திபெத்தை இணைக்கும் ஒரு பழைய பாதசாரிகளுக்கான சாலை உள்ளது. இது  இன்றும் பயன்படுகிறது. இப்பாதை பீம்தால், பண்டய காலத்தில், புகழ்பெற்ற பட்டு பாதையின் ஒர் அங்கமாக இருந்தது என்பதை நிருபிக்கின்றது.

தற்போது பீம்தால், நைனிடால் மாவட்டத்தின் ஒரு மினி தலைமையகமாக செயல்படுகிறது.  இந்த நகரம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனின் பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கே உள்ள பீமேஸ்வரர் ஆலயம்,  பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது கட்டப்பட்டது, என்று நம்பப்படுகிறது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பீம்தால்  ஏரியின்  இறுதியில் அமைந்துள்ள விக்டோரியா அணையை, பார்வையிடலாம். அணையின் இயற்கைக்காட்சியானது, நம்மை மெய்மறக்கச்செய்யும் அளவிற்கு உள்ளது.

சுற்றுலா பயணிகள், பீம்தால் ஏரியின் நடுவே உள்ள  தீவில் அமைந்துள்ள அக்வேரியத்தை பார்க்க முடியும். இந்த ஏரி, இமயத்தை தாண்டி இடம் பெயரும் பல பறவைகளை தன்னுள் ஈர்கிறது.

இந்த ஏரியில் மிகச் சிறந்த படகுச்சவாரி வசதிகள் உள்ளன. பீம்தாலில், நாகங்களின் அரசன் கார்கோடகனுக்கு ஒரு கோயில் உள்ளது. இந்த கார்கோடகன் புராண காலத்தில் பரிஷித் மகாராஜாவின் உயிரை பறித்ததாக நம்பப்படுகிறது.

சுற்றுலா பயணிகள், பீம்தாலிலிருநது 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பிரபலமான `சத்டாலை', பார்வையிடலாம். இது ஒன்றோடொன்று இணைந்த அழகான ஏழு ஏரிகளின் தொகுப்பாகும். சத்டால் பல்வேறு உயிரினங்களுக்கு இயற்கையான இருப்பிடமாக திகழ்கிறது.

இங்கு 500 உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் இடம் பெயரும் பறவைகள், 11000 பூச்சிகள், மற்றும் பட்டாம்பூச்சியின் 525 இனங்கள் உள்ளன. மீன் கொத்தி பறவை(kingfisher),  காட்டு பட்சி குக்குருவன் (brown-headed barbet), நீல விசில் பூங்குருவி ( blue whistling-thrush), மற்றும் வால் காக்கை(Indian tree pies) போன்ற பறவைகள் இங்கே காணப்படுகின்றன.

பீம்தாலுக்கு அருகில், ` காத்கோடம்'  ரயில் நிலையம் உள்ளது. இது, பீம்தாலில் இருந்து  21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சாலை மூலம் பீம்தாலை அடைவது மிகவும் சுலபம்.  நைனிடால், டேராடூன், ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் போன்ற புகழ்பெற்ற சுற்றுலா பகுதிகளிலிருந்து  பீம்தாலுக்கு  பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சுற்றுலா பயணிகள், முசோரி, ருத்ரபிராயக், கவ்சனி, ரானிஹெட், மற்றும் உத்தரகாசிலிருந்தும் பீம்தாலுக்கு  பேருந்துதில் செல்ல முடியும். தில்லிருந்து ஏராளமான ஆடம்பர சுற்றுலா பேருந்துகள் பீம்தாலுக்கு இயக்கப்படுகின்றன.

இப்பகுதியில்,  ஆண்டு முழுவதும்  துணை வெப்பமண்டல பருவநிலை நிலவுகிறது. இவ்விடத்தின் பருவங்கள் கோடைகாலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என பிரிக்கப்பட்டுள்ளது. 

கோடை காலத்தில், பீம்தாலின்  வெப்பநிலை  10 ° C முதல் 27° C வரை மாறுபடுகிறது.   மழை காலத்தில், பீம்தால் கடும் மழைப்பொழிவை அனுபவிக்கிறது. உறைபனி குளிர்காலம்,  நவம்பரில் தொடங்கி பிப்ரவரியில் முடிகிறது.

இக்காலங்களில்  வெப்பநிலை -3 ° C வரை சென்று விடுகிறது.  எனவே, பீம்தாலுக்கு சுற்றுலா செல்வதற்கு கோடைகாலமே மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.

பீம்தால் சிறப்பு

பீம்தால் வானிலை

சிறந்த காலநிலை பீம்தால்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது பீம்தால்

 • சாலை வழியாக
  பீம்தால், உத்தரகண்ட் மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களுடன் சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. காத்கோடம் மற்றும் குமாவோ பிராந்தியத்தில் இருந்து ஏராளமான டாக்சிகள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தில்லியில் உள்ள மாநிலங்களுக்கிடையேயான பேருந்து நிலையயமான `ஆனந்த் விஹார்' இல் இருந்து ஆடம்பர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. `அல்மோரா' மற்றும் `நைனிடால்' போன்ற இடங்களில் இருந்து கூட பீம்தாலுக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  பீம்தாலுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் 21 கி.மீ. தொலைவில் உள்ள ` காத்கோடம்' ரயில் நிலையம். இது தில்லியில் இருந்து 278 கி.மீ. தொலைவில் உள்ளது. தில்லி மற்றும் காத்கோடமிற்கு இடையே இரண்டு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன். சுற்றுலா பயணிகள், இந்த ரயில் நிலையத்திலிருந்து பீம்தால் செல்ல வாடகை டாக்சிகள் உள்ளன.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  `பந்த் நகர்' விமான நிலையம் பீம்தாலுக்கு மிக அருகில் உள்ளது. சர்வதேச சுற்றுலா பயணிகள், புது தில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூலம் பீம்தாலை அடையலாம். பந்த் நகர் விமான நிலையத்தில் இருந்து பீம்தாலுக்கு ஏராளமான டாக்சிகள் மற்றும் பேருந்துகள் உள்ளன.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 May,Sat
Return On
09 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
08 May,Sat
Check Out
09 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
08 May,Sat
Return On
09 May,Sun