Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» லாண்ஸ்டவுன்

லாண்ஸ்டவுன் - புத்துயிரூட்டும் புதிய இடம்!

21

போர் நினைவு சின்னம் ட்ரெண்ட்டை சேர்ந்த அப்போதைய இந்திய தலைமை  கமாண்டரன `லார்ட் ராவ்லின்ஷன்'  என்பவரால் 1923 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி நிறுவப்பட்டது.

கார்வாலி உணவகம் 1888 இல் பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்களில் ஒன்று. கார்வாலி  உணவகம் தற்போது ஆசியாவின் மிக முக்கியமான அருங்காட்சியமாக திகழ்கிறது.

புல்லா டால், லாண்ஸ்டவுனில் உள்ள மற்றொரு முக்கியமான இடமாகும். இது கர்வால் ரைஃபிள்ஸின் இளம் வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட அழகான செயற்கை ஏரி.  இந்த ஏரியின் பெயரான புல்லா என்பது ஒரு கார்வாலி வார்த்தையாகும்.

ராயல் பொறியாளரான  கலோனல்` A.H.B.  ஹியூம்' என்பவரால் 1895 ல் கட்டப்பட்ட `செயின்ட் மேரி'  தேவாலயம் மற்றுமொறு குறிப்பிடத்தக்க சுற்றுலா மையம் ஆகும்.  1947 இல் கைவிடப்பட்ட இத்தேவாலயத்தை , கர்வால் ரைஃபிள் ராணுவ மையம் புதுபித்துக் கட்டியது.

இங்கு சுதந்திர காலத்திற்கு முந்தய இந்தியாவின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  ராணுவ அருங்காட்சியகம், துர்கா தேவி கோவில், புனித ஜான் சர்ச், ஹவாகர், மற்றும் டிப்-ன்-டாப் ஆகியன குறிப்பிடத்தக்க சுற்றுலா மையங்கள் ஆகும்.

சாகசத்தை விரும்பும் பயணிகள் மலையில் ட்ரெக்கிங் செய்தும், காடுகளில் உலவியும் மகிழலாம். இங்கே உள்ள `காதலர்களின் பாதை' தலைசிறந்த மலைப்பாதையாக கருதப்படுகிறது. இப்பாதையில் ட்ரெக்கிங் செய்வது நமக்கு நம்பமுடியாத அனுபவத்தை தருகிறது.

இப்பகுதியில் உள்ள பச்சைப்பசேல் காடுகள், பலவகையான தனித்தன்மை வாய்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிரம்பியுள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள அழகான காடுகளில் உலவி வரலாம்.

இங்கு உள்ள  பல சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள், மிகக் குறைந்த செலவில் ட்ரெக்கிங் மற்றும் சஃபாரி முதலியவற்றை ஏற்பாடு செய்து தருகின்றனர்.

லாண்ஸ்டவுனை  விமானம், ரயில், மற்றும் சாலை மார்கமாக எளிதில் அணுகலாம். டேராடூனில் அமைந்துள்ள `ஜாலி கிராண்ட்' விமான நிலையம் லாண்ஸ்டவுனுக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்.

கோட்வாரா ரயில் நிலையம் லாண்ஸ்டவுனுக்கு மிக அருகில் உள்ளது. மார்ச் முதல் நவம்பர் வரை உள்ள 9 மாதங்கள் லாண்ஸ்டவுனை சுற்றி பார்ப்பதற்கு மிகவும் உகந்த பருவமாகும். அச்சமயங்களில் இப்பகுதியில் சாதகமான சூழ்நிலை நிலவும்.

லாண்ஸ்டவுன் சிறப்பு

லாண்ஸ்டவுன் வானிலை

சிறந்த காலநிலை லாண்ஸ்டவுன்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது லாண்ஸ்டவுன்

  • சாலை வழியாக
    லாண்ஸ்டவுன் சாலை மூலம் அருகிலுள்ள இடங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுப்பேருந்துகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான பேருந்துகள் டேராடூன், ஹரித்வார், மற்றும் முசோரியில் இருந்து லாண்ஸ்டவுன் நகருக்கு அடிக்கடி இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    லாண்ஸ்டவுனேவிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள கோட்வாரா ரயில் நிலையம் மிக அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையம், முக்கியமான இந்திய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து லாண்ஸ்டவுனேவிற்கு செல்ல டாக்சிகள் எளிதாக கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    லாண்ஸ்டவுனிற்கு அருகில் உள்ள விமான நிலையம் 148 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டேராடூனின் `ஜாலி கிராண்ட்' விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் புது டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்விமான நிலையத்தில் இருந்து லாண்ஸ்டவுனிற்கு சுற்றுலா செல்லும் பயணிகள், வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி கொள்ள முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue