Search
  • Follow NativePlanet
Share

கல்சி - கவின் கொஞ்சும் குக்கிராமம்!

21

உத்தரகண்ட் டேராடூன் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 780 மீ உயரத்தில் உள்ள ஒரு அழகான சுற்றுலாத் தலம்தான் கல்சி. ஜான்சர்-பவர் என்ற ஆதிவாசியினரின் வாழ்விடத்தின் நுழைவாயிலாக விளங்கும் கல்சி யமுனா மற்றும் டன் நதிகள் சந்திக்கும் இடத்தில் உள்ளது. 

கல்சியில் பல பண்டைய நினைவுச் சின்னங்களும், சாகச விளையாட்டுக்களும் மிகவும் பிரபலம். இங்கிருக்கும் 'அரசாணை தாங்கிய அசோகன் பாறை' இந்திய கல்வெட்டு ஆய்வு வரலாற்றில் ஒரு முக்கிய நினைவுச்சின்னமாக இருந்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றது.

இப்பாறையில் காணப்படும் மவுரிய அரசின் 14-வது அரசாணை, கிமு 253-ஆம் காலத்தில் பொறிக்கப்பட்ட்து. இதிலுள்ள அரசாணையில் பிராமி எழுத்துருவிலான பிராகிருத மொழியில் அரசனின் சீர்திருத்தங்கள் மற்றும் அறிவுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பத்தடி உயரமும் எட்டடி  அகலமும்  கொண்ட பிரமாண்டமான கட்டமைப்பை இதில் காணலாம்.

புலம்பெயர்ந்து வரும் பல்வேறு அரிய பறவைகளின் தங்கும் இடமான ஆசன் பரேஜை இங்கு கண்டு களிக்கலாம். சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் இங்கு வரும் பறவைகளை அரிய பறவைகள் என சான்றிதழ் அளித்துள்ளது.

மல்லார்ட் என்ற காட்டு வாத்து, சிவப்பு முகம் கொண்ட ஆண் வாத்து, சிவப்பு நிற வாத்துவகை, தண்ணீர் கோழி, பெரிய நீர் காகம், உண்ணிக்கொக்கு, வாலாட்டுக்குறுவி, குளநாரை, மீன்பிடி கழுகுகள், சேற்றுப் பூனைப் பருந்து, பெரிய புள்ளிகளுடைய கழுகு, கடற் பறவை மற்றும் வன்பாலை  போன்ற அரிய வகைப் பறவைகளை பறவை விரும்பிகள் கண்டு ரசிக்கலாம்.

அக்டோபர் – நவம்பர் மற்றும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் புலம் பெயர்ந்து வரும் பதினொறு வகை பறவைகளையும், நீர்ப்பறவைகளும் இங்கு ஒன்றாக காணலாம்.

கல்சியின் விகாஸ்நகரம் ஒரு சிறந்த கடைவீதி. தோனி, படகுசவாரி, பனிச்சறுக்கு, மெத்தூர்தி, கப்பல் போன்ற கேளிக்கைகளுக்கு கல்சியில் சிறந்த இடமாக விளங்கும் இடம் டக்பதர்.

இவ்விடத்தின் சுத்தமான யமுனா நதியில் கட்டுமர பயணமும் மேற்கொள்ளலாம். இங்கு செப்டம்பர்–அக்டோபர் மற்றும் மார்ச்–ஏப்ரல் மாதங்களில் சுற்றுலா செல்பவர்கள் நன்னீர் வகை மீன்களை பிடிக்க தனியார் ரிசார்ட் உரிமையாளர்களும்  ஏற்பாடு செய்து தருகின்றனர்.

திமிலி பாஸ், கட்டா பத்தர் மற்றும் சக்ரத்தா போன்ற இடங்களும் கல்சியில் பார்க்கக் கூடிய இடங்களாகும். டெகர்டன் விமான நிலையத்திலிருந்து கல்சிக்கு விரைவு விமான போக்குவரத்து உள்ளது.

புது டில்லி போன்ற அருகாமை நகரங்களிலிருந்தும் பேருந்துகள் கல்சிக்கு இயக்கப்படுகின்றன. கல்சிக்கு சுற்றுலா செல்ல விரும்பினால் கோடை காலமே சிறந்தது.

கல்சி சிறப்பு

கல்சி வானிலை

சிறந்த காலநிலை கல்சி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கல்சி

  • சாலை வழியாக
    டேராடூன் உட்பட அருகிலுள்ள நகரங்களிலிருந்தும் கல்சிக்கு செல்ல பேருந்து வசதிகள் நிறைய உண்டு. புது தில்லியில் இருந்து தொடர்ச்சியாக பல சொகுசு பேருந்துகளும் கல்சிக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    டேராடூனிலிருந்து 49 கி.மீ. தொலைவில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து இந்த நிலையத்திற்கு ரயில்கள் அடிக்கடி கிடைக்கின்றன. இந்த நிலையத்திலிருந்து கல்சிக்கு செல்ல டாக்சிகளையும் நீங்கள் அமர்த்திக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஜாலி கிராண்ட் விமான நிலையத்திலிருந்து 73 கிமீ தூரத்தில் நகரத்தின் மையத்தை சுலபமாக அடையலாம். புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ”தினசரி விமானங்கள்” மூலம் இந்த விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. நியாயமான கட்டணத்தில் ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் இருந்து கல்சி செல்ல டாக்சிகளும் இங்குண்டு.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri