Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கல்சி » ஈர்க்கும் இடங்கள் » ஆசன் பரேஜ்

ஆசன் பரேஜ், கல்சி

21

ஆசன் மற்றும் யமுனா நதிகள் சந்திக்கும் இடத்தில் ஆசன் பரேஜ் உள்ளது. ஆசன் நதியின் மூலம் உருவாக்கப்பட்ட  நான்கு சதுர பரப்பளவிலான செயற்கை ஈர நிலத்தை இங்கு காணலாம்.

நீரின் அளவு குறையும் போது பல மண் தீவுகளையும் இங்கு பார்க்க முடியும். சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் இங்கு வரும் பறவைகளை அரிய வகை  பறவைகள் என்று சான்றளித்துள்ளது.

மல்லார்ட் என்ற காட்டு வாத்து, சிவப்பு முகம் கொண்ட ஆண் வாத்து, சிவப்பு நிற வாத்துவகை, தண்ணீர்க் கோழி, பெரிய நீர்க் காகம், உண்ணிக்கொக்கு, வாலாட்டுக்குறுவி, குளநாரை, மீன்பிடிக் கழுகுகள், சேற்றுப் பூனைப் பருந்து, பெரிய புள்ளிகளுடைய கழுகு, கடற் பறவை, மற்றும் வன்பாலை  போன்ற அரிய வகை பறவைகளை பறவை விரும்பிகள் கண்டு ரசிக்கலாம்.

பனிக்காலம் தென்னிந்தியாவை நோக்கி செல்லும் பல பறவைகள் இங்கு தங்கிச் செல்வதை காண்பது கண்ணுக்கழகு.

அக்டோபர் இறுதியில் பாலி ஆர்டிக் கடற்கரையிலிருந்து புலம் பெயர்ந்து வரும் பறவைகளை இங்கு காணமுடிகிறது. அக்டோபர் – நவம்பர் மற்றும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் பறவைகள் பலவற்றை கண்டு ரசிக்க முடியும். பாலஸ் என்ற மீன் கொத்தி கழுகின் முப்பது வருட தங்கும் இடமாக இவ்விடம் உள்ளது.

பதினொறு வகை புலம் பெயர்ந்து வரும் பறவைகளையும், நீர்ப்பறவைகளும் இங்கு ஒன்றாக காணலாம். அதில் சில செம்மை நிறக் கழுத்துடைய வாத்துக்கள், ஊசிவால் வாத்து, கருவால் வாத்து, ஆண் வாத்து, அமெரிக்க பறவையான செம்மை நிற முகமுடைய வாத்து, காட்டு வாத்து, குடுமியுடைய வாத்து போன்ற பறவைகளாகும்.

செப்டம்பர் - மே மாதம் வரை இங்கு செங்கால் நாரை, திறந்த அலகுடைய நாறை, மற்றும் இரவு நாரை போன்ற பறவைகளை பார்க்க இது ஒரு சிறந்த பருவமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri