Search
  • Follow NativePlanet
Share

யமுநோத்ரி - சூடான நீரூற்றுகளின் மத்தியில் குளிர் வீசும் பகுதி!

20

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் யமுநோத்ரி ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். புனித நதி என்று அழைக்கப்படும் கங்கை ஆற்றின் பெயரிலிருந்து இந்த பகுதி யமுநோத்ரி என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3293 மீ உயர்த்தில் இருக்கும் யமுநோத்ரி பந்தர் பூஞ்ச் பகுதியில் அமைந்திருக்கிறது.

புவியியல் ரீதியாக பார்த்தால் கடல் மட்டத்திலிருந்து 4421 மீ உயரத்தில் உற்பத்தியாகி பாய்ந்து வரும் சம்பாசர் பனியாற்றிலிருந்து கங்கை ஆறு உற்பத்தியாகி வருகிறது. சம்பாசர் பனியாறு யமுநோத்ரி ஆலயத்திற்கு 1 கிமீ தொலைவில் இருக்கிறது.

இந்த பனியாற்றை அடைவது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் இந்த பனியாறு இந்திய சீன எல்லைப் பகுதியை ஒட்டிய பகுதியில் இருக்கிறது. யமுநோத்ரி ஆலயத்தை அடைய ஒரு நாள் முழுவதும் பனிச்சறுக்கு மூலம் அடத்தியான காடுகள் வழியாக பயணம் செய்ய வேண்டும். மேலும் பக்தர்கள் குதிரைகளை வாடகைக்கு எடுத்து, குதுரைச் சவாரி செய்து யமுநேத்ரி ஆலயத்தை அடையலாம்.

யமுநோத்ரி பகுதி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கார்வல் பகுதியின் நிர்வாகத்தில் கீழ் இருக்கிறது. யமுநோத்ரி (சார் தாம் என்று பொதுவாக அழைக்கப்படும்) இந்து சமய மக்களின் முக்கிய புனிதத் தலங்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது.

யமுநோத்ரி பகுதியின் முக்கிய புனித ஸ்தலமாக யமுநோத்ரி ஆலயம் அறியப்படுகிறது. இந்த ஆலயம் இந்து சமய நதி தேவதையான யமுநோத்ரிக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது.

ஜான்கி சாட்டியில் இருக்கும் சூடான நீரூற்றுகள் யமுநோத்ரியின் அடுத்த முக்கிய அம்சங்களாக உள்ளன. சூர்யா குன்ட் என்ற சூடான நீரூற்று மிக முக்கியமான நீரூற்றாகும். அரிசி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியற்றை மஸ்லின் துணியில் போட்டு பின் அவற்றை இந்த கொதிக்கும் நீரூற்றில் மூழ்க வைத்து அதன் மூலம் பிரசாதம் தயாரிப்பர்.

யமுநோத்ரிக்கு மிக அருகில் கர்சாலிக்கு என்ற மிகச் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பல நீர்வீழ்ச்சிகளும், நீரூற்றுகளும் உள்ளன. மற்றும் சிவபெருமானுக்கான ஒரு பழைய ஆலயமும் இந்த பகுதியில் அமைந்திருக்கிறது.

மேலும் யமுநோத்திரி ஆலயத்திற்கு மிக அருகில் திவ்ய சீலா என்று ஒரு புனித கல்லும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த புனித கல்லிற்கு தெய்வீக விளக்கு என்று பொருள். யமுநோத்ரி ஆலயத்திற்கு செல்வதற்கு முன்பு இந்த புனிதக் கல்லை பக்கதர்கள் தரிசிப்பது வழக்கம்.

மேலும் யமுநோத்ரி புனித ஆலயத்திற்கு செல்லுவதற்கு முன்பு பத்கோட் என்ற நகரத்தில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் தங்குவது உண்டு. இந்த நகரம் தராசு என்ற பகுதியிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது.

ஆப்பிள் தோட்டங்களால் சூழப்பட்டிருக்கும் இப்பகுதியில் ஏராளமான பிரசித்தி பெற்ற பல இந்து சமய ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன. மேலும் அனுமான் சாட்டி என்று ஒரு பிரபல சுற்றுலாத் தளமும் யமுநோத்ரிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அனுமான் சட்டி, பனிச்சறுக்கிற்கு மிகவும் பிரபலமான இடமாக விளங்குகிறது.

யமுநோத்ரிக்கு மிக எளிதாக சென்றுவர முடியும். விமானம் மூலம் செல்ல வேண்டும் என்றால் யமுநோத்ரிக்கு அருகில் டெராடுனில் இருக்கும் ஜாலி கிரான்ட் விமான நிலையம் அமைந்திருக்கிறது. அதுபோல் யமுநோத்ரிக்கு அருகில் ரிஷிகேஷ் மற்றும் டெராடுனில் தொடர்வண்டி நிலையங்களும் உள்ளன.

மேலும் அருகில் இருக்கும் நகரங்களிலிருந்து யமுநோத்ரிக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர்த்து சுற்றுலா பயணிகள் டாக்ஸிகள் மூலம் அனுமான் சாட்டிக்குச் சென்று பின் பனிச்சறுக்கு மூலம் யமுநோத்ரிக்குச் செல்ல முடியும்.

ஏப்ரல் முதல் ஜூலை வரை யமுநோத்ரியில் கோடைகாலம் நிலவுகிறது. மழைக் காலத்தில் இங்கு அதிகமான மழை அளவு இருக்கும். மேலும் குளிர்காலத்தில் இந்த பகுதியில் ம்க அதிகமாகன பனிப்பொழிவு இருக்கும்.

வெப்பநிலையும் 0 டிகிரிக்கும் குறைவாக இருக்கும். மே முதல் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆகிய காலத்தில் யமுநோத்ரி பகுதிக்குச் சுற்றூலாச் செல்லலாம்.

யமுநோத்ரி சிறப்பு

யமுநோத்ரி வானிலை

சிறந்த காலநிலை யமுநோத்ரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது யமுநோத்ரி

  • சாலை வழியாக
    பேருந்துகள் மூலம் யமுநோத்ரி அடைவது மிகவும் எளிது. அனுமான் சாட்டியிலிருந்து பேருந்துகள் மூலம் யமுநோத்ரிக்கு மிக எளிதாகச் செல்ல முடியும். அனுமான் சாட்டிக்கு, டெராடுன், தேரி, உத்தர்காசி மற்றும் ரிஷிகேஷ் போன்ற நகரங்களிலிருந்து பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் புதுடில்லியில் இருக்கும் காஷ்மீர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து பிடித்து ரிஷிகேஷிற்கு வந்து பின் அங்கிருந்து பேருந்து மூலம் அனுமான் சாட்டிக்கு மிக எளிதாக செல்ல முடியும். அனுமான் சாட்டியிலிருந்து 14 கிமீ பனிச்சறுக்கு மூலம் யமுநோத்ரியை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    யமுநோத்ரிக்கு 200 கிமீ மற்றும் 175 கிமீ தொலைவில் ரிஷிகேஷ் மற்றும் டெராடுன் தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. இந்த தொடர்வண்டி நிலையங்களுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்து தொடர்வண்டிகள் வந்து செல்கின்றன. இந்த தொடர்வண்டி நிலையங்களில் இறங்கி பின் டாக்ஸிகள் மூலம் யமுநோத்ரி அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    விமானம் மூலம் செல்ல வேண்டும் என்றால் யமுனோத்ரிக்கு 210 கிமீ தொலைவில் ஜாலி கிரான்ட் விமான நிலையம் அமைந்திருக்கிறது. புதுடில்லியில் இருக்கும் இந்திராகாந்தி விமான நிலையத்திலிருந்து ஜாலி கிரான்ட் விமான நிலையத்திற்கு போதுமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஜாலி கிரான்ட் விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்ஸியில் பயண் செய்து அனுமான் சாட்டியை அடையலாம். அங்கிருந்து பனிச்சறுக்கு மூலம் யமுநோத்ரி செல்ல முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon