Search
  • Follow NativePlanet
Share

கோமுக் - பனியாறுகளின் தாயகம்!

14

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உத்தரகண்ட் மாநிலம், ஏராளமான சுற்றுலாத் தலங்களை கொண்டிருக்கிறது. அவற்றில் முக்கியமான ஒரு அழகிய சுற்றுலாத் தலம் கோமுக் ஆகும். இந்த கோமுக் பகுதி கங்கோதரி கிளேசியரின் (பனி ஆறு) முடிவில் அமைந்திருக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்ரகாஷி மாவட்டத்தில் கோமுக் அமையப்பெற்றுள்ளது.

ஏராளமான மலைகளால் சூழப்பட்டிருக்கும் கோமுக்கிற்கு அருகில் ஷிவ்லிங் மலை உச்சி உள்ளது. ஷிவ்லிங் மலை உச்சி, மலை ஏற்றத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்ற பகுதியாகும்.

கங்கை நதியின் கிளை ஆறுகளில் ஒன்றான பகிரதி நதியும் கோமுக் பகுதியில் உற்பத்தியாகிறது. கோமுக்கிற்கு மிக அருகில் டோப்பவன் சமவெளி அமைந்திருக்கிறது. இந்த சமவெளியின் இயற்கை எழிலை அள்ளிப் பருகுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.

கோமுக் பகுதியின் அருகாமை விமான நிலையமாக டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையம் அறியப்படுகிறது. அதோடு ரயில் மார்க்கமாக கோமுக் வர விரும்பும் பயணிகள் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரித்வார் ரயில் நிலையத்தை பயன்படுத்தி கங்கோத்ரி வழியில் வரலாம்.

இதுதவிர உத்தரகண்ட்டின் பிற பகுதிகளிலிருந்து கோமுக் பகுதிக்கு எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் கோமுக் பகுதிக்கு சுற்றுலா வருவதற்கு கோடை காலமே ஏற்ற பருவமாக கருதப்படுகிறது.

கோமுக் சிறப்பு

கோமுக் வானிலை

சிறந்த காலநிலை கோமுக்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கோமுக்

  • சாலை வழியாக
    பேருந்து முலம் கோமுக்கிற்கு செல்ல வேண்டும் என்றால், கங்கோதரி நகருக்கு, ஹரித்வார், ரிசிகேஷ், முசூரி, டெரி மற்றும் யமுன்டோரி ஆகிய பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே பேருந்து மூலம் மிக எளிதாக கங்கோதரிக்கு சென்று பின் பனிச்சறுக்கு மூலம் கோமுக்கிற்கு செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தொடர்வண்டி மூலம் கோமுக்கிற்கு செல்ல வேண்டும் என்றால், கங்கோதரி நகரிலிருந்து 230 கிமீ தொலைவில் ஹரித்வார் தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது. இந்த தொடர்வண்டி நிலையத்திற்கு, டில்லி, டெர்டன் மற்றும் அலகாபாத் போன்ற இடங்களிலிருந்து அடிக்கடி தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. எனவே ஹரித்வார் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி டாக்ஸி மூலம் கங்கோதரி நகருக்கு மிக எளிதாக வரமுடியும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    விமானம் மூலம் செல்ல வேண்டும் என்றால் கங்கோதரி நகரிலிரிந்து 229 கிமீ தொலைவில் ஜாலி கிராண்ட் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இந்த விமான நிலையத்திற்கு பல விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே விமானம் மூலம் ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை டாக்ஸி எடுத்து கங்கோதரி நகரை அடைந்து பின் பனிச்சறுக்கு மூலம் கோமுக்கை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat