மலையேற்றம், கோமுக்

கோமுக்கில் சுற்றுலாப் பயணிகள் மலையேற்றத்தில் ஈடுபடவே அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மிக பிரசித்தி பெற்ற மலையேற்றப் பாதையான கங்கோதரி 22 கிமீ பரவி இறுதியில் கோமுக்கில் முடிவு பெறுகிறது.

புஜ்பாசா என்ற பகுதி கோமுக்கிலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இங்கிருக்கும் கர்வல் மன்டல் விக்காஸ் நிகாம் லிமிடட்டிற்கு சொந்தமான பங்களாவில் ஒரு இரவு சுற்றுலா பயணிகள் தங்கலாம்.

இங்கு 5 கிமீ வரை மலையேற்றம் செய்துவிட்டு பின் கோமுக்கை சென்றடையலாம். டோப்பவன் மற்றும் நந்தன்வன் பகுதிகளுக்குச் செல்லும் மலையேற்றப் பாதைகளும் கோமுக்கிலிருந்து தொடங்குகின்றன.

இந்த பகுதியில் மலையேற்றம் செய்வது மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில் இங்கு அடிக்கடி பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும். எனவே வழிகாட்டிகளின் உதவியோடுதான் சுற்றுலா பயணிகள் மலையேற்றத்தில் ஈடுபட வேண்டும்.

மேலும் டோப்பவன் மலை உச்சியில் ஏறுவதும் மிகவும் சவாலாக இருக்கும். ஏனெனில் இந்த மலை உச்சி 70 டிகிரி சாய்வாக இருக்கும். இதன் உயரம் 1500 அடியாகும். இந்த மலை 2 கிமீ பரவி இருக்கிறது. எனவே மலையேற்றத்தில் ஈடுபடுவர்களுக்கு இந்த மலை உச்சியில் ஏறுவதும் மிகவும் சவாலான செயலாக இருக்கும்.

Please Wait while comments are loading...