தாக் பதர் என்பது டேராடூன்-சக்ரதா சாலையில் அமைந்துள்ள ஒரு அமைதியான சுற்றுலாத்தலம். இந்த இடத்தில் ஒரு நீர்மின்சார உற்பத்தி ஆலை உள்ளது. பனிசறுக்கு போன்ற பல்வேறு தண்ணீர் விளையாட்டுகள், படகு, நீர் சறுக்கு, மற்றும் படகோட்டம் போன்ற விளையாட்டுகளில் இங்கு ஈடுபட்டு திளைக்கலாம்.
சுற்றுலாப் பயணிகளுக்கென GMVN தங்கும் விடுதியில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நல்ல பயிற்சியாளரின் துணையை கொண்டு நீந்தலாம். அழகான யமுனா பள்ளத்தாக்கையும் இந்த இடத்தில் இருந்து பார்க்க முடியும்.