சம்பா வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Chamba,Uttarakhand 2 ℃ Patchy light drizzle
காற்று: 8 from the NE ஈரப்பதம்: 65% அழுத்தம்: 1020 mb மேகமூட்டம்: 82%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Wednesday 13 Dec 0 ℃ 32 ℉ 6 ℃43 ℉
Thursday 14 Dec -2 ℃ 28 ℉ 5 ℃41 ℉
Friday 15 Dec 0 ℃ 32 ℉ 8 ℃46 ℉
Saturday 16 Dec 2 ℃ 35 ℉ 10 ℃51 ℉
Sunday 17 Dec 3 ℃ 37 ℉ 12 ℃54 ℉

சம்பாவிற்கு வருடத்தில் எந்த நேரமும் வந்து மகிழலாம். இருப்பினும் குளிர் காலம் உச்சத்தில் இருக்கும் போது மட்டும் இங்கே வருவதை தவிர்ப்பது நல்லது. மார்ச் மாதத்திலிருந்து ஜூன் வரை இங்கே வருவது சிறந்தது. ஏற்ற வானிலை நிலவுவதால், சுற்றி பார்க்கவும் இதமாக இருக்கும். மேலும் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலங்களிலும் இங்கே வரலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை): சம்பாவில் கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும். இந்நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 14 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும். கோடைக்காலத்தில் தான் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் இங்கே வருவர்.

மழைக்காலம்

(ஜூலை முதல் அக்டோபர் வரை): மழைக்காலம் ஜூலையிலிருந்து அக்டோபர் மாதம் வரை இங்கே நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் இங்கே லேசான முதல் மிதமான மழைப்பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): குளிர் காலம் நவம்பரில் ஆரம்பித்து பிப்ரவரி வரை இருக்கும். இந்த காலத்தில் குறைந்தபட்ச வெப்ப நிலை 4 டிகிரி வரை பதிவாகும். பொதுவாக இந்த வட்டாரத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் பனிமழை பெய்யும். இருப்பினும் சில வருடங்களாக இங்கே பனி பொழிவு இருப்பதில்லை.