Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர் » வானிலை

தர் வானிலை

தர் வருவதற்கு சிறந்த காலம் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை. இந்த நேரத்தில் வானிலை மிகவும் இனிமையாக இருப்பதுடன் அதிகமாக குளிரவும் செய்யாது. லேசான குளிருக்கு தேவையான ஆடைகளோடு இந்த காலத்தில் இங்கு பயணிக்கலாம்.

கோடைகாலம்

தர் நகரில் கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி வெப்ப நிலை மெதுவாக உயரும். பகல் நேரம் அதிக வெப்பத்துடன் இருந்தாலும் இரவு நேரம் ரம்மியமாக இருக்கும். பகல் நேரத்தில் வெப்ப நிலை 34 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். இரவு நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியாக 16 டிகிரி செல்சியஸ் வரை இறங்கும். இந்த காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் செல்லும். ஈரப்பதமும் குறைவாகவே இருப்பதால் காய்ந்த நிலையில் இருக்கும்.

மழைக்காலம்

தர் நகரில் பருவக்காலம் ஜூன் மாதம் தொடங்கும் பருவக்காலம். இந்த தொழிற்சாலை நகரத்தில் அதிகபட்ச மழை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும். ஒவ்வொரு வருடமும் சராசரி மழையின் அளவு 1000 மி.மீ. ஆக இருக்கும். ஈரப்பதமும் சற்று அதிகமாக காணப்படும்.

குளிர்காலம்

குளிர் காலத்தில் தர் நகரம் மிகவும் இனிமையாக இருக்கும். இந்த காலத்தில் சராசரியான குளிர் நிலவும். இங்கு வருவதற்கு சிறந்த காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை. குளிர் காலத்தில் குறைந்தபட்ச வெப்ப நிலை 5 டிகிரி வரை குறையும். இது தொழிற்சாலை வட்டாரம் என்பதால் வெளிநாட்டில் இருந்து தொழில் விஷயமாக பலர் இந்தகாலத்திலேயே இங்கு வர விரும்புவார்கள்.