Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தார்சூலா » வானிலை

தார்சூலா வானிலை

கோடைக்காலமும், மழைக்காலமும் ஊர் சுற்றிப் பார்க்க வசதியாக இல்லாததால் அவை தார்சூலாவிற்கு சுற்றுலா வர ஏற்ற பருவங்கள் கிடையாது. எனவே. சுற்றுலாப் பயணிகள் குளிர் காலங்களில் வந்து குளுமையாக தார்சூலாவின் இயற்கையழகை ரசித்திடலாம்.

கோடைகாலம்

தார்சூலாவில் மார்ச் மாதம் தொடங்கும் கோடைக்காலம் ஜுன் மாதம் வரை நீடித்திருக்கும். இந்நாட்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகளாக முறையே 45°C மற்றும் 30°C ஆகியவை இருக்கும்.

மழைக்காலம்

தார்சூலாவின் மழைக்காலம் ஜுலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடித்திருக்கிறது. இந்நாட்களில், மழைப்பொழிவு மிகவும் கடுமையாக இருக்குமாதலால், சுற்றிப் பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

குளிர்காலம்

தார்சூலாவில் டிசம்பர் மாதம் தொடங்கும் குளிர் காலம் பிப்ரவரி மாதம் வரை நீடித்திருக்கும். இந்நாட்களில் பதிவு செய்யப்ட்ட அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகளாக முறையே 5.5°C மற்றும் 8°C ஆகியவை உள்ளன.