Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தேன்கனல் » வானிலை

தேன்கனல் வானிலை

குளிர் காலத்தில், அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இங்கு சுற்றுலா வருவதே சிறந்தது. இந்த மாதங்களில் வெப்பநிலை இனிமையாக இருப்பதால் சுற்றுலா செல்வதற்கும் தோதாக இருக்கும். மேலும் இந்த கால கட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களையும் கண்டு மகிழலாம்.

கோடைகாலம்

கோடைக்காலங்களில் தேன்கனல் மிகுந்த வெப்பத்துடன் விளங்குவதால் சுற்றுலாப் பயணிகள் இக்காலத்தில் இங்கு வருவதை தவிர்க்க வேண்டும். மார்ச் மாதம் இங்கு தொடங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடிக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 42 டிகிரி வரை செல்லக் கூடும். கண்டிப்பாக சுற்றுலாவிற்கு இது ஏற்ற காலம் கிடையாது.

மழைக்காலம்

ஜூன் மாதத்தில் இங்கு தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். வெயிலின் கொடுமையை தணிக்கும் வகையில் இக்காலம் மக்களுக்கு ஆறுதலாக விளங்கும். தட்ப வெப்பநிலை ஓரளவுக்கு குறையத் தொடங்கும். அதனால் வெப்பமும் தணியும்.

குளிர்காலம்

தேன்கனலில் குளிர் காலம் இதமாக இருக்கும்.டிசம்பர் மாதம் ஆரம்பிக்கும் குளிர் காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 10° செல்சியஸ் முதல் 25° செல்சியஸ் வரை நிலவும். தேன்கனலுக்கு சுற்றுலா வர வேண்டுமானால் குளிர் காலமே சிறந்த காலமாக விளங்கும்.