Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திப்ருகார் » வானிலை

திப்ருகார் வானிலை

இதமான வானிலையே எப்போதும் நிலவுகின்ற திப்ருகாருக்கு வருடத்தின் எப்பகுதியிலும் சென்று வரலாம். கோடைகள் ரம்மியமாகவும், சுற்றிப் பார்ப்பதற்கு ஏதுவாகவும் காணப்படுகின்றன. மழைக்காலங்கள் இந்த இடத்துக்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தையும், மணத்தையும் அளிக்கின்றன. குளிர்காலங்கள் அமைதியைப் பரப்புகின்றன. அதனால் சுற்றுலாப் பயணிகள் திப்ருகாருக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம்.

கோடைகாலம்

மார்ச் மாதம் ஆரம்பிக்கும் கோடைகாலம் மே மாத இறுதி வரை நீடிக்கிறது. எனினும், வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸுக்கு மேல் மிக அரிதாகவே செல்வதனால், கோடை மாதங்களில் கூட வெப்பம் அதிகமாக தாக்குவதில்லை. இமயமலையின் கீழ்பாகத்தில் உள்ள இப்பகுதியில் பதிவான வெப்பநிலைகளுள் 20 டிகிரி செல்சியஸே குறைந்த பட்ச வெப்பநிலையாகும். மொத்தத்தில், திப்ருகாரின் கோடைகள் ரம்மியமானவையாகவே இருக்கின்றன.

மழைக்காலம்

இப்பகுதியின் இதர பாகங்களைப் போலவே திப்ருகாரும் அதீதமான மழைப்பொழிவைப் பெறுகிறது. ஜூன் மாதத்தில் தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் வரை நீடிக்கிறது. மழைக்காலத்துக்குப் பிந்தைய மாதங்களான அடுத்த இரு மாதங்களும் மிகவும் ரம்மியமானவையாகவும், இனிமையானவையாகவும் காணப்படுகின்றன. மழைக்காலத்தின் போது இப்பகுதியின் பசுமை மேலும் கண்ணுக்கினியதாகக் காணப்படுகிறது.

குளிர்காலம்

டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகியவை குளிர் கால மாதங்கள் ஆகும். குறைந்த பட்ச வெப்பநிலை சுமார் 9 டிகிரி செல்சியஸாகவும், பகல் பொழுதின் சராசரி வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸைச் சுற்றியும் காணப்படும். குளிர்காலங்கள் மிதமானவையாக இருப்பதினால் மிக இனிமையானவையாகவும் விளங்குகின்றன. குளிர்காலங்களின் போது திப்ருகார் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மெல்லிய கதகதப்பான உடைகளே போதுமானது.