கடல் மட்டத்திலிருந்து 6500 மீ உயரத்தில் அமைந்துள்ள கண்கவரும் சிந்தா பள்ளத்தாக்கினை சுற்றிலும் அடர்த்தியான ஊசியிலைக் காடுகள் உள்ளன. இந்த பள்ளத்தாக்கினை சுற்றிலும் சிந்தா நள்ளாவில் இருக்கும் துபா உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன.
துபா, படேர்வாவை சிந்தா பள்ளத்தாக்கிலிருந்து பிரிக்கும் மிகவும் உயரமான இடமாகும். இந்து மதத்தில் அழிவை தன் பணியாக செய்யும் கடவுளாக இருக்கும், சிவ பெருமானின் கோவில் ஒன்றும் இந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாக்கனிலிருந்து துபா செல்லும் வழிகளில் குதிரையேற்றம் செய்தும் மகிழ முடியும். சுபர் நாக் சிகரம் மற்றும் சுபர் நாக் கோவில் ஆகியவை சிந்தா பள்ளத்தாக்கிற்கு அருகிலிருக்கும் பிற சுற்றுலா தலங்களாகும்.



Click it and Unblock the Notifications