Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » எர்ணாகுளம் » வானிலை

எர்ணாகுளம் வானிலை

மிதமான பருவநிலை நிலவும் நவம்பர் முதல் பிப்ரவரி பாதி  வரையிலான காலத்தில் எர்ணாகுளத்திற்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது. அது மட்டுமல்லாமல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப்பிறப்பு போன்ற கொண்டாட்டங்கள் டிசம்பரில் இடம்பெறுவது கூடுதல் விசேஷம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடுமையான வெப்பம் நிலவும் என்பதால் அக்காலத்தில் இந்த நகரத்துக்கு விஜயம் செய்வது தவிர்ப்பது நல்லது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் எர்ணாகுளம் பகுதியில் அதிக உஷ்ணமும் அதிக வறட்சியும் நிலவுகிறது. இக்காலத்தில் நிலவும் அதிகபட்சமான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை தாங்கிக்கொள்வது வெளியூர் பயணிகளுக்கு வெகு சிரமமாகவே இருக்கும். குறிப்பாக இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். எனவே எர்ணாகுளம் சுற்றுலாவுக்கு இந்த கோடைக்காலம் சிறிதும் உகந்ததல்ல.

மழைக்காலம்

கோடைக்காலத்தில் அதிக உஷ்ணம் என்றால் மழைக்காலத்தில் எர்ணாகுளம் பகுதி கடுமையான மழைப்பொழிவை பெறுகிறது. அதிக மழையானது இப்பகுதியின் வாழ்க்கையையே ஸ்தம்பிக்க செய்துவிடுகிறது. குறிப்பாக ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கு கடும் மழைப்பொழிவு நிலவுகிறது. மழையால் கழுவப்பட்டு நகரம் முழுதும் பசுமையுடன் காட்சியளித்தாலும் வெளிச்சுற்றுலா மற்றும் நீர் விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுவது சாத்தியமில்லை. எனவே மழைக்காலமும் எர்ணாகுளம் சுற்றுலாப்பயணத்துக்கு ஏற்றதாக இருக்காது.

குளிர்காலம்

அதிர்ஷ்டவசமாக குளிர்காலத்தில் எர்ணாகுளம் பிரதேசம் குளுமையான இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது. டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் இங்கு சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்றவையாக காணப்படுகின்றன. மாலை நேரத்தில் மெலிதான அங்கி மட்டும் குளிருக்காக அணிந்து கொண்டால் போதும். வெளிச்சுற்றுலா மற்றும் நீர் விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குளிர்காலம் மிகவும் உகந்ததாக உள்ளது.