கங்கோத்ரியின் ஆண்டு முழுவதுற்குமான சராசரி வெப்பநிலை 9° C. இங்கு, கோடை காலம் மிகவும் இனிமையானது. அதேசமயம், குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக உறைபனி ஏற்படும்.
(மார்ச் முதல் மே வரை): மார்ச் மாதம் ஆரம்பமாகும் கோடைகாலம், மே மாதம் வரை தொடர்கிறது. இந்த காலங்களில், இவ்விடத்தின் சராசரி வெப்பநிலை 20 டிகிரியாக இருக்கும்.
( ஜூலை முதல் ஆகஸ்ட் வரை): கங்கோத்ரியின் பருவமழை, ஜூலை மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட்டில் முடிகிறது. இந்த காலங்களில், இப்பகுதியில் கன மழை ஏற்படுவதுண்டு. எனவே, இந்த காலங்களில், இப்பகுதி கோயில்களுக்கு புனித யாத்திரை செல்லது மிகவும் கடினமாகும்.
(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): கங்கோத்ரியின் குளிர்காலம், டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் நிலவுகிறது. இந்த காலங்களில் கங்கோத்ரி பகுதியில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும்.