அளவில் மிகச்சிறியதாகவும் குறைந்த மக்கள் தொகையுடனும் காணப்படும் இந்த தீவில் ‘நார்கொண்டாம் இருவாட்சி மற்றும் ‘நிக்கோபார் மெகாபாட்’ (வான்கோழி போன்ற பறவையினம்) என்ற இரண்டு அரிய வகை பறவையினங்கள் வசிக்கின்றன.
அரிதான இயற்கை வளத்துடன் ஜொலிக்கும் இந்த தீவில் பார்த்து ரசிக்க ஏராளமான அம்சங்கள் நிறைந்துள்ளன. மற்ற அந்தமான் தீவுகளைப்போல் அல்லாமல் இந்த தில்லன்சாங் தீவு மூன்று நிக்கோபாரிய தனியார் குடும்பங்களுக்கு சொந்தமானதாக உள்ளது.
இந்த குடும்பத்தினரின் சொந்த பராமரிப்பில் உள்ள இந்த தீவுப்பகுதிக்கு வருடமொருமுறை அவர்கள் விஜயம் செய்வது பாரம்பரிய வழக்கமாகவும் உள்ளது. 17 ச.கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த தீவின் இயற்கைச்செழுமையும், பசுமையும் பிரமிப்பூட்டும் வகையில் காட்சியளிக்கின்றன. தற்போது அழிந்து வரும் நிலையிலுள்ள மேலே குறிப்பிடப்பட்ட பறவையினங்களை பாதுகாக்கும் முயற்சியாக இவற்றுக்கென ஒரு சரணாலயம் தற்போது இந்த தீவில் உருவாக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications