குணா நகரின் தென் மேற்கே சுமார் 8 கிமீ தொலைவில், குணா ஆரோன் சாலையில் அமைந்துள்ளது பஜ்ரங்கர் கோட்டை. இந்தக் கோட்டையை ஜார்கோன் என்றும் அழைப்பர்.
1775 ஆம் ஆண்டு, மராத்திய சாம்ராஜ்யத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கோட்டையைச் சுற்றி கன்னரி, ரங்க் மஹால் மற்றும் மோதி மஹால் போன்ற மண்டபங்கள் உள்ளன. இந்தக் கோட்டை முழுமையாக சேதம் அடைந்திருந்தாலும், இதன் அழகும், கம்பீரமும், இன்றும் பல சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுத்து வருகிறது.
92.3 மீ உயரத்தில் அமைந்துள்ள பஜ்ரங்கர் கோட்டையின் உட்புறத்தில், பெரிய படிகளைக் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. குதிரைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக, இந்தக் கிணறு பயன்பட்டிருக்கிறது. கோட்டியினுள் ஒரு கோவிலும் அமைந்திருக்கிறது. உள்ளூர் மக்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம்.



Click it and Unblock the Notifications