குணா நகரில் இருக்கும் மற்றொரு முக்கியமான தலம், ஜைன திருக்கோவில். இந்த ஜைனக் கோவிலில் உண்மையான பெயர் ஸ்ரீ சாந்திநாத திகம்பர் ஜெயின் அதிஷய க்ஷேத்ரா என்பதாகும்.
1236-ஆம் ஆண்டும், ஜெயின் துறவி ஸ்ரீ படா ஷா என்பவரால் கட்டப்பட்ட இத்திருக்கோவிலில், ஜெயின் தீர்த்தங்கரர்களில் சிலைகள் அமைந்துள்ளன. இந்தச் சிலைகள் சிவப்பு கற்களால் செய்யப்பட்டவை ஆகும்.
வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் இருக்கும் அழகிய சிற்பங்கள் இக்கோவிலை அலங்கரிக்கின்றன. ஸ்ரீ படா ஷா அவார்களுக்கு சிறப்புமிக்க ஒரு தொடு கல் கிடைத்தால், இந்த ஜைனக் கோவிலை வெகு விரைவில் கட்டி முடித்தார் என்கின்றனர் அங்குள்ள மக்கள்.
இந்தக் கோவிலின் மூலவர் சாந்திநாதர். வானத்தை நோக்கிய்படிம், நின்று கொண்டிருக்குக்கும் தோற்றத்தில் அமைந்துள்ள இந்த சிவப்பு நிற அழகிய சிலை, 18 அடி உயரம் கொண்டது.
மேலும், சாந்திநாதரின் இருபுறமும், அரஹநாதர் மற்றும் குந்துநாதரின் சிலைகள் அமைந்துள்ளன. அரஹநாதர் சிலை சுமார் 9 அடி உயரமும், குந்துநாதர் சிலை சுமார் 10 அடியும் உயரமும் கொண்டவையாகும்.
மற்ற கடவுள்களில் சிலைகளும் இங்கு அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய எழில்மிகு இடம் இந்த ஜைனத் திருக்கோவில்.



Click it and Unblock the Notifications