ஹேம்குந்த் என்ற இடம் உத்தரகண்டிலுள்ள சமோலி மாநகராட்சியில் அமைந்துள்ள சீக்கியர்களுக்கான புனித ஸ்தலம். இந்த புனித ஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 15200 அடி உயரத்தில் உள்ளது. இங்கே செல்ல ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையிலுள்ள கோபிந்த்காட்டிலிருந்து நடந்து தான் செல்ல வேண்டும். சமஸ்கிருத வார்த்தைகளான ஹேம் மற்றும் குந்த் என்பதை வைத்து தான் இந்த இடம் இப்பெயரைப் பெற்றது. ஹேம் என்றால் பனி மற்றும் குந்த் என்றால் கிண்ணம் என்று பொருளாகும். இந்த இடம் ஏழு மலைகளுக்கு நடுவில் இருக்கிறது. ஒவ்வொரு மலைகளிலும் நிஷான் சாஹிப் என்ற சீக்கியர்களின் முக்கோண வடிவில் இருக்கும் புனித கொடி நட்டு வைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஏழு மலை உச்சிகளையும் சப்ட் ஷ்ரிங் என்று அழைப்பர். புராணத்தின் படி இந்த இடத்தில் தான் சீக்கியர்களின் பத்தாவது குருவான, குரு கோபிந்த் சிங் பல வருடங்களாக தியானத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த இடம் குரு கோபிந்த் சிங் நினைவாக உள்ள குருத்வாரா ஹேம்குந்த் சாஹிப் என்ற புனித ஸ்தலத்துக்கு புகழ் பெற்றது. மேலும் இந்த இடம் குரு கோபிந்த் சிங் எழுதிய தசம் கிரந்த் என்ற சீக்கியர்களின் புனித புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருத்வாரா கட்ட ஆரம்பித்தது 1960 ஆம் ஆண்டாகும். இதற்கு பொறுப்பு வகித்தவர் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் என்பவர். முதன்மை பொறியாளராக இருந்த இவர் கட்டுமான பணியை கட்டட கலைஞர் சியாலி என்பவரின் பொறுப்பில் விட்டு இருந்தார்.
குருத்வாரா அருகாமையில் ஒரு அழகிய ஏரியை காணலாம். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை அதிக பனியில் உறைந்து போய் இருப்பதால் இந்த இடம் அந்நேரத்தில் மூடப்பட்டுவிடும். மே மாதம் சீக்கியர்கள் 'கற் சேவா' என்ற சேவையில் ஈடுபட்டு, பாதைகளை சீர் செய்ய உதவுவார்கள்.
நேரம் கிடைத்தால் சுற்றுலாப் பயணிகள் லக்ஷ்மன் கோவிலுக்கும் செல்லலாம். இதனை இந்த வட்டாரத்தில் லக்ஷ்மன் கோபால் என்றும் அழைப்பார்கள். பத்ரிநாத் அருகில் இருக்கும் வசுதரா அருவியும் மற்றொரு புகழ் பெற்ற தலமாகும்.
மலைகள் சூழ்ந்துள்ள இந்த அருவியில் 400 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதை பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த இடத்தை நடைபயணம் மூலம் வந்தடையலாம்.
இந்த நடை பயணம் மணா கிராமத்தில் ஆரம்பித்து 2-3 கிலோமீட்டருக்கு நல்ல கல் பாதை மூலம் சுலபமாக செல்லலாம். பின்னர் அந்த பாதை மிகவும் செங்குத்தாக செல்லும்.
ஹேம்குந்த்தில் இருக்கும் இன்னொரு முக்கிய சுற்றுலாத் தலம் கடல் மட்டத்திலிருந்து 7817 மீட்டர் உயரத்தில் உள்ள நந்தா தேவி தேசிய பூங்காவாகும். பூக்கள் நிறைந்த ஒரு புகழ் பெற்ற பள்ளத்தாக்கு இந்த பூங்காவின் வட மேற்கு திசையை நோக்கியுள்ளது.
இந்த தேசிய பூங்காவை அங்குள்ள பள்ளத்தாக்குடன் சேர்த்து நந்தா தேவி உயிர்க்கோளம் காப்பகம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மொத்த பரப்பளவு 2236.75 சதுர கிலோமீட்டரில் பரந்து கிடக்கிறது. மேலும் இடைத்தடுப்பு தடுக்கின் பரப்பளவு 5148.57 சதுர கிலோமீட்டர் வரை இருக்கும்.



Click it and Unblock the Notifications