Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்ப்பூர் » வானிலை

ஜெய்ப்பூர் வானிலை

ஜெய்ப்பூர் பிரதேசத்தின் பருவநிலை கோடையில் அதிக வெப்பத்துடனும் குளிர்காலத்தில் அதிகக் குளிருடனும் காணப்படுகிறது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூலை வரை): ஜெய்ப்பூர் பகுதி ஏப்ரல் மாதம் துவங்கி ஜூலை மாதம் வரை கோடைக்காலத்தை பெறுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 45° C ஆகவும், குறைந்தபட்சமாக 25° C ஆகவும் காணப்படுகிறது. கோடைக்காலத்தில் இப்பகுதி அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை): ஜெய்ப்பூர் பகுதியில் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் மிகக்குறைவான மழைப்பொழிவையே இப்பகுதி பெறுகிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): ஜெய்ப்பூர் பகுதி டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை குளிர்காலத்தை பெறுகிறது. குளிர்காலத்தில் மிகக்கடுமையான குளிர் இப்பிரதேசத்தில் காணப்படுகிறது. இக்காலத்தில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 5° Cயிலிருந்து 20° C வரை நிலவுகிறது. பயணம் மேற்கொள்ள சிறந்த காலம்அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான இடைப்பட்ட காலம் ஜெய்ப்பூர் நகரத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்த பருவமாக கருதப்படுகிறது.