பாகரா எனும் இந்த நீர்வீழ்ச்சி ஜெய்பூர் நகரத்திற்கு அருகில் உள்ள மற்றொரு முக்கியமான நீர்வீழ்ச்சி ஸ்தலமாகும். ஜெய்பூர் நகரத்திற்கு அருகில் 6 மைல் தூரத்தில் உள்ள கொண்டகுடா இடத்திலிருந்து மண் சாலைகள் வழியாக 3 மைல் பயணம் செய்து இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம்.
இந்த நீர்வீழ்ச்சியில் மூன்று வீழ்ச்சிகள் 30 அடி உயரத்திலிருந்து விழுகின்றன. கோலாப் ஆற்றின் போக்கில் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது.
பயணிகளின் வசதிக்காக இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலத்தில் ஒரு ஓய்வு விடுதி ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இங்கு கவிழ்ந்திருக்கும் இயற்கை எழில் அம்சங்களை ரசிப்பதற்காக உள்ளூர் மக்கள் இப்பகுதிக்கு பிக்னிக் சிற்றுலாப்பயணம் மேற்கொள்கின்றனர். சுற்றுலாப்பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை தரிசிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த 30 அடி உயர நீர்வீழ்ச்சியில் பால் போன்ற வெண்ணிறத்தில் வழியும் பிரவாகத்தின் அழகு பார்வையாளர்களை சொக்க வைத்துவிடுகிறது. ஜெய்பூர் நகரத்திற்கு சுற்றுலா விஜயம் செய்யும் அனைவருமே இந்த நீர்வீழ்ச்சிக்கு தவறாது விஜயம் செய்கின்றனர். பேருந்து, டாக்சி மற்றும் ஆட்டோ மூலம் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications