Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்பூர் (ஒடிசா) » ஈர்க்கும் இடங்கள் » தேவ்மாலி

தேவ்மாலி, ஜெய்பூர் (ஒடிசா)

18

தேவ்மாலி எனும் இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 1672 மீ உயரத்தில் அமைந்துள்ளது. ஒரிஸா மாநிலத்தின் மிக உயர்ந்த சிகரம் எனும் பெருமையையும் இது கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயரமான சிகரமாகவும் இது வீற்றிருக்கிறது. ஜெய்பூர் நகரத்திலிருந்து 84 கி.மீ தூரத்தில் இந்த மலைச்சிகரம் அமைந்துள்ளது.

சலசலத்து ஓடும் நீரோடைகள், ஆழமான பள்ளத்தாக்குகள், அடர்த்தியான காடுகள் மற்றும் சமவெளிகள் போன்ற இயற்கை அம்சங்களுடன் இந்த மலைப்பகுதி ஒளிர்கிறது.

செழிப்பான தாவர வளம் மற்றும் காட்டுயிர் வளம் போன்றவற்றையும் இந்த தேவ்மாலி மலைப்பகுதி கொண்டுள்ளது. புனியா, போத்ரா, பரஜா மற்றும் மாலி எனப்படும் பழங்குடி இனத்தவர் இந்த மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர்.

சாகச போழுதுபோக்குகளை விரும்புவர்களுக்கு ஏற்ற ஹேங் கிளைடிங், டிரக்கிங் மற்றும் மவுண்டனீரிங் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த மலைப்பகுதியில் காத்திருக்கின்றன.

இந்த தேவ்மாலி மலையில் ரயில் போக்குவரத்துக்கான சுரங்கப்பாதை அமைப்புகளும் உள்ளன. இவ்வழியே ரயிலில் பயணிக்கும் அனுபவத்தையும் சிறப்பான ஒரு சுவாரசிய அம்சமாக கூறலாம்.

உயர்ந்தோங்கிய மலைகள், சரிவுகள், பள்ளத்தாக்குகள் போன்றவற்றை ரசித்தபடி இந்த பாதையின் வழியே ரயிலில் பயணிப்பது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும்.  

இங்குள்ள சாலைகளில் பயணிக்கும் அனுபவமும் பரவசமூட்டும் ஒன்றாகவே உள்ளது. பல்வேறு திடீர் வளைவுகளைக்கொண்டதாகவும் சுருள் சுருளாக மலைமீதிருந்து இறங்குவதைப்போன்றும் இந்த மலைக்கான சாலைப்பாதை அமைந்திருக்கிறது.

ஜெய்பூர் நகரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் இந்த தேவ்மாலி மலைச்சிகரத்திற்கு விஜயம் செய்வது அவசியம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed