ஜெய்பூர் நகரத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள இந்த குப்தேஷ்வரா குகை அடர்ந்த காட்டின் நடுவே கோலாப் ஆற்றிற்கு அருகே அமைந்திருக்கிறது.
இந்த குகையின் உள்ளே குப்தேஷ்வர் என்றழைக்கப்படும் புனிதமான லிங்கம் காணப்படுகிறது. குப்தேஷ்வர் எனும் பெயருக்கு ‘ஒளிந்திருக்கும் கடவுள்’ என்பது பொருளாகும். சட்டிஸ்கர் மாவட்டத்தில் இந்த கோயிலை குப்த கேதார் என்றும் அழைக்கின்றனர்.
இந்த ஸ்தலத்தில் நடைபெறும் சிரவணா திருவிழாவுக்காக இப்பகுதி நாடெங்கிலும் பிரசித்தி பெற்றுள்ளது. சிவராத்திரி திருநாளின்போதும் இங்கு ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர்.
புராணக்கதைகளின்படி ராமர் இவ்வழியே தன் மனைவி சீதை மற்றும் லட்சுமணனுடன் கடந்து சென்றபோது இந்த லிங்கத்தை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த இடத்திற்கு அருகில் சபரி எனும் ஆறு ஓடுகிறது. ரம்மியமான இந்த ஆற்றின் கரையில் சிறிது ஓய்வெடுப்பது உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை அளிப்பதாக உள்ளது.
உயர்ந்த மலைச்சிகரங்கள், அடர்ந்த வனப்பகுதி, அமைதியான ஆறு மற்றும் ஆன்மீக வெளிச்சம் வீசும் சிவ லிங்கம் போன்ற அம்சங்கள் இந்த குப்தேஷ்வரா குகை ஸ்தலத்தை முக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன.



Click it and Unblock the Notifications