Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்பூர் (ஒடிசா) » ஈர்க்கும் இடங்கள் » கோலாப்

கோலாப், ஜெய்பூர் (ஒடிசா)

18

கோலாப் எனும் இந்த நீர்த்தேக்கப்பகுதி ஜெய்பூர் நகரத்திலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் பெருக்கெடுத்து ஓடும் கோலாப் ஆற்றில் குறுக்கே அமைந்துள்ளது.

இது ஜெய்பூர் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த அணை நீர்த்தேக்கத்திலிருந்து நீர்மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரிஸா நீர்மின் உற்பத்தி கழகம் இந்த ஸ்தலத்தில் அமைந்துள்ளது.

இந்த அணைநீர்த்தேக்கத்திலிருந்து கோராபுத், சுனபேதா, தமன்ஜோடி மற்றும் ஜெய்போர் நகரத்துக்கு குடிநீர் விநியோகமும் நடைபெறுகிறது. கோலாப் அணைக்கு அருகிலேயே அமைந்துள்ள பாடனிகல் தாவரவியல் பூங்காவிற்கு ஏராளமான மக்கள் வார இறுதி நாட்களில் பிக்னிக் உல்லாசப்பயணமாக வருகை தருகின்றனர்.

இந்த தாவரவியல் பூங்காவில் 200 வகையான மலர்த்தாவரங்கள் நிறைந்துள்ளதால் ரம்மியமான இயற்கை எழிலுடன் இந்த பூங்கா பார்வையாளர்களை கவர்கிறது.

மேலும், இந்த நீர்த்தேக்கத்தில் படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம். இந்த நீர்த்தேக்கத்தின் மையப்பகுதியில் கேச்சேலா எனும் சிறு தீவு போன்ற அமைப்பும் உள்ளது. படகுகள் மூலம் இந்த தீவுக்கு செல்லலாம்.

இரவு நேரத்தில் இந்த நீர்த்தேக்க பிரதேசத்தின் சூழல் அழகுடன் காட்சியளிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் இந்த கோலாப் அணைப்பகுதியின் இயற்கை அழகை ரசிக்கவும், நன்கு பரமாரிக்கப்பட்டு காணப்படும் தாவரவியல் பூங்காவை பார்த்து ரசிக்கவும் அதிக எண்ணிகையில் வருகை தருகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue