மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் இந்த மின்னா ஜோலா எனும் அமைதி ஸ்தலம் ஏகாந்தமாக ஓய்வெடுப்பதற்கும் புத்துணர்ச்சியூட்டிக்கொள்ளவும் மிகவும் ஏற்றது.
இங்குள்ள ஒரு சிவன் கோயிலில் மஹா சிவராத்திரி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உள்ளூர் பக்தர்களும் பெண்களும் அச்சமயம் இந்த கோயிலுக்கு திரளாக வந்து வழிபடுகின்றனர்.
இங்குள்ள ஆற்றங்கரையை ஒட்டி அடர்த்தியான வனப்பகுதியும் காணப்படுகிறது. ஆறுகள் கூடும் சங்கம ஸ்தலங்கள் யாவுமே இந்தியாவில் புனிதமாக கருதப்பட்டு வருவதால் இந்த மின்னா ஜோலாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஜெய்பூர் நகரத்திலிருந்து டாக்சி அல்லது ஆட்டோ மூலம் இந்த மின்னா ஜோலாவை வந்தடையலாம். இருப்பினும் பேருந்து சேவைகள் சிக்கனமான பயண வசதியை அளிக்கின்றன.



Click it and Unblock the Notifications