Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்பூர் (ஒடிசா) » வானிலை

ஜெய்பூர் (ஒடிசா) வானிலை

குளிர்காலப்பருவமே ஜெய்பூர் நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் ஒன்பது நாட்களுக்கு நடத்தப்படும் துசேரா பண்டிகை மற்றும் மஹா சிவ ராத்திரி போன்ற பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. இக்காலத்தில் சுற்றுலாப்பயணிகள் ஊர் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்ற குளுமையான இனிமையான சூழல் நிலவுவதோடு திருவிழாக்காட்சிகளும் காணக்கிடைக்கின்றன.

கோடைகாலம்

ஜெய்பூர் பகுதியில் மே மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் ஜூலை வரை நீடிக்கிறது. இக்காலத்தில் 38°C முதல் 45°C  வரை வெப்பநிலை நிலவுகிறது. கோடைக்கால வெப்பத்தில் இங்கு உஷ்ணத்தாக்குதலால் மரணங்கள் நேர்வது ஒரு வழக்கமாக உள்ளது. எனவே கோடைக்காலத்தில் ஜெய்பூர் நகருக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்த்துவிடுவது சிறந்தது.

மழைக்காலம்

ஜுலை மாதத்திலிருந்து ஜெய்பூர் நகரில் மழைக்காலம் துவங்கி செப்டம்பர் மாதம் அல்லது அக்டோபர் மாதம் வரை நீடிக்கிறது. இக்காலத்தில் நீர்வீழ்ச்சிகள் ரம்மியமாக காட்சியளிக்கின்றன என்றாலும் ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகம் இருக்கும் என்பதால் வெள்ளப்பெருக்குகளும் ஏற்படுவதுண்டு. எனவே  மழைக்காலமும் ஜெய்பூர் நகருக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததல்ல.

குளிர்காலம்

குளிர்காலத்தில் ஜெய்பூர் நகரம் இனிமையான சூழலை பெற்றுள்ளது. இக்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 4°C  வரை நிலவுகிறது. இருப்பினும் இரவை விட பகல் நேரம் சற்றே இதமான வெப்பத்துடன் காணப்படுகிறது. பயணிகள் குளிர்தாங்கும் உடைகளுடன் இக்காலத்தில் பயணம் மேற்கொள்வது சிறந்தது.