Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜாலாவார் » வானிலை

ஜாலாவார் வானிலை

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலப்பருவமே ஜாலவார் நகருக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் பருவநிலையானது இனிமையான சூழல் மற்றும் குளுமையுடன் காணப்படுகிறது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): ஜாலாவார் பிரதேசத்தில் மார்ச் மாதத்தில் துவங்கி மே வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் கோடையில் குறைந்தபட்சம் 27° C முதல் அதிகபட்சமாக 42° C வரை வெப்பநிலை நிலவுகிறது. பொதுவாகவே கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் குறிப்பாக மே மாதத்தில் தாங்கமுடியாத அளவுக்கு வெப்பநிலை உயர்கிறது.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை): ஜாலாவார் பிரதேசத்தில் ஜுன் மாதத்தில் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கின்றது. மழைப்பொழிவின் காரணமாக இக்காலத்தில் வெப்பநிலை சராசரியாக 30° C என்ற அளவில் மிதமாக காணப்படுகிறது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): ஜாலாவார் பிரதேசத்தில் டிசம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கின்றது. இக்காலத்தில் பருவநிலை குளுமையான மற்றும் இனிமையான சூழலுடன் காணப்படுகிறது. சராசரி வெப்பநிலை 11° C முதல் 25° C வரை நிலவுகிறது.