Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜான்ஸி » வானிலை

ஜான்ஸி வானிலை

வட இந்தியாவின் பிற நகரங்களைப் போன்றே, ஜான்ஸியிலும் வானிலை இதமாகவும், ரம்மியமாகவும் இருக்கக்கூடிய நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டமே இங்கு செல்வதற்கு உகந்த காலகட்டமாகும். எஞ்சியுள்ள பிற மாதங்களில், மிகவும் வெப்பமான, வறண்ட வானிலையே காணப்படும். இந்நகரம், சுமார் ஒரு வார காலத்திற்குக் கொண்டாடப்படும் ஜான்ஸி திருவிழா நடைபெறும் காலமான பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களின் போது பல்லாயிரக்கணக்கான பயணிகளை வரவழைக்கக்கூடியதாக விளங்குகிறது.                 

கோடைகாலம்

கோடைகாலம், மார்ச் முதல் மே வரையிலான மாதங்களில் நிலவுகின்றது. குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். இக்காலத்தின் உச்சபட்ச வெப்பம் நிலவும் மாதமாக மே மாதம் விளங்குகின்றது. வெப்பக்காற்று வீசி இக்கோடை நாட்களை மேலும் கடுமையானவையாக ஆக்குகின்றது.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை நிலவும் மழைக்காலத்தின் போது, இந்நகரம் விட்டு விட்டுப் பெய்யக்கூடிய கடும் மழைப்பொழிவைப் பெறுகின்றது. வானம் மேகமூட்டத்துடன் இருப்பதனால் வானிலை ஈரப்பதத்துடன் காணப்படும்.   

குளிர்காலம்

குளிர்காலம், நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கின்றது. இக்காலத்தின் போது வானிலை இதமாகவும், ரம்மியமாகவும், 12 டிகிரி செல்சியஸுக்கும், 20 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்ட வெப்பநிலையுடனும் காணப்படும்.