ஜோத்பூர் விமானத்தளம் நகர மையத்திலிருந்து 5கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது டெல்லி, மும்பை, உதய்பூர் மற்றும் ஜெய்பூர் நகரங்களுக்கு தினசரி விமான சேவைகளைக்கொண்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து நகருக்குள் செல்வதற்கு டாக்சிகள் மற்றும் ரிக்ஷா போன்றவை பயணிகள் வசதிக்காக உள்ளன. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் டெல்லியிலுள்ள இந்திரா காந்தி விமான நிலையம் வழியாக இணைப்புச்சேவைகள் மூலம் வருகை தரலாம்.