Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோத்பூர் » வானிலை

ஜோத்பூர் வானிலை

ஜோத்பூர் நகரத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்த காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான இடைப்பட்ட காலமாகும். இக்காலத்தில் பருவநிலை குளுமையாகவும் இனிமையாகவும் சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்த்து ரசிக்க ஏற்றதாகவும் உள்ளது.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை): ஜோத்பூர் பகுதி மார்ச் மாதத்தில் துவங்கி ஜூன் மாதம் வரை கோடைக்காலத்தை பெறுகிறது. இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக முறையே 23° C முதல் 45° C வரை காணப்படுகிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): ஜோத்பூர் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை மழைக்காலத்தைப் பெறுகிறது. மிதமான மழைப்பொழிவே காணப்படும் இக்காலத்தில் ஒவ்வொரு வருடமும் மழையின் அளவு வேறுபட்டு காணப்படுகிறது. மேலும் இக்காலத்தில் வெப்பநிலை அவ்வளவாக குறைவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): ஜோத்பூர் பிரதேசத்தில் டிசம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 15.5° C யிலிருந்து 27.5° C வரை நிலவுகிறது. குளிர்காலத்தில் இனிமையான மற்றும் குளுமையான சூழல் காணப்படுகிறது.