Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோர்கட் » வானிலை

ஜோர்கட் வானிலை

மழையும் ஈரப்பதமும் குறைந்து, வெப்பநிலை மகிழ்ச்சிகரமானதாக உருவெடுக்கும் குளிர்காலம் ஜோர்கட் சுற்றுலா வர மிகவும் ஏற்ற பருவமாகும். இந்நாட்களில் மஜுலிக்கு ஆற்று வழியில் பயணம் செய்வதும் அற்புதமான அனுபவமாக இருக்கும். இந்நாட்களில் மென்மையான கம்பளி ஆடைகளை பயன்படுத்தினால் போதும்.

கோடைகாலம்

ஜோர்கட் நகரத்தில் ஏப்ரல் முதல் ஜுன்-ஜுலை மாதங்களில் நிலவும் கோடைக்காலம் வெப்பமாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும். இந்நாட்களில் சராசரி வெப்பநிலை 25 டிகிரி முதல் 35 டிகிரி வரையிலும் இருக்கும். கோடைக்காலத்தின் முடிவில் மழைக்காலம் தொடங்கிவிடும்.

மழைக்காலம்

உலகின் இந்த பகுதியில் ஜுலை மாதத்தில் தொடங்கும் மழைக்காலம் அடைமழையை கொண்டு வருவதாக இருக்கும். இந்த மழைப்பொழிவு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் வரையிலும் கூட நீடிக்க வாய்ப்புகளுண்டு. அதிகமான மழைப்பொழிவு பெய்யும் இந்த மாதங்களில் ஜோர்கட்டில் சுற்றுலா என்பது நடவாத காரியம். தென் மேற்கு பருவக்காற்றின் மூலம் ஜோர்கட்டிற்கு மழை கிடைக்கிறது.

குளிர்காலம்

ஜோர்கட் நகரத்தில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் மகிழ்ச்சிகரமான குளிர்காலம் நிலவுகிறது. இந்நாட்களில் நம்மை காயப்படுத்தாத அளவிற்கு வெப்பநிலை குறைந்து காணப்படும். ஜோர்கட்டின் குளிர்காலத்தை சமாளிக்க மென்மையான கம்பளி ஆடைகள் போதுமானவையாக உள்ளன. இந்நாட்களில் 10 டிகிரி C ஆக இருக்கும் வெப்பநிலை, 25 டிகிரி வரை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.