சந்திர நஹான் ஏரி ஜுப்பல் நகரின் முக்கியமான சுற்றுலா அம்சமாக திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து 4260 மீ உயரத்தில் உள்ள இது பப்பர் ஆறு உற்பத்தியாகும் இடமாகவும் விளங்குகிறது.
சன்சால் சிகரத்திற்கு அருகில் வீற்றிருக்கும் இந்த ஏரியும் சுற்றியுள்ள கண்கவர் இயற்கைக்காட்சிகளும் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் அழகை கொண்டுள்ளன. சாகசப்பிரியர்களுக்கு ஏற்ற ஒரு சிரமமான மலையேற்றப்பாதையும் இந்த ஏரிக்கருகில் உள்ளது.
இவை தவிர இந்த ஏரியில் பயணிகள் மீன்பிடிக்கும் பொழுது போக்கில் ஈடுபடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications